Enable Javscript for better performance
குடும்ப சமேதராய் கண்ணன்- Dinamani

சுடச்சுட

    

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் "வேங்கட கிருஷ்ணன்' எனும் திருநாமத்தோடு மூலக் கருவறையில் ருக்மணி பிராட்டியாருடன் தம்பி சாத்யகி, அண்ணன் பலராமன், மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்ரன் ஆகியோருடன் குடும்ப சமேதராய் அருள்பாலிக்கிறார்.
    மேளம் கொட்டாத கோயில் : நாகர்கோவிலில் அழகிய பாண்டிபுரத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் பாலகிருஷ்ணன் துயிலில் ஆழ்ந்துள்ளார் என பக்தர்கள் நம்புகிறார்கள். அந்தக் குழந்தையின் தூக்கம் கலைந்து போகும் என்பதால் ஆலயத்தில் நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியங்கள் வாசிப்பதில்லை.
    பாலகிருஷ்ணன்: நாகர்கோவில், வடசேரி அருகே கிருஷ்ணன் கோயில் என்ற ஊர் உள்ளது. இத்தலத்திலுள்ள மூலவர், "பாலகிருஷ்ணன்' குழந்தை வடிவில் நின்றபடி அருள்காட்சி அளிக்கிறார். தொடர்ந்து மூன்று அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திர நாளில் இவ்வாலயத்துக்குச் சென்று பாலகிருஷ்ணனை வழிபட்டு வெண்ணெய்யும் பாலும் வாங்கி உண்டால், குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
    - இரா. பாலகிருஷ்ணன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai