Enable Javscript for better performance
சோதனைகளை வென்றெடுப்போம்- Dinamani

சுடச்சுட

    
    13

    புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன், மின்சார பல்பை கண்டுபிடித்தவர். டங்ஸ்டன் என்னும் மெல்லிய இழையை பயன்படுத்தி மின்சார பல்பை ஒளிரச்செய்ய முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய அறிவியல் அறிஞர் இவர்தான். 

    மின்சார பல்பை கண்டுபிடிப்பதற்கு முன்பு ஏராளமான பரிசோதனைகளை செய்தார் எடிசன். முதலில், கம்பிகளை இணைப்பதற்கு டங்ஸ்டனுக்குப் பதில் சின்னசின்ன கம்பிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். வேறு உலோகங்களாலான இழைகளையும் பயன்படுத்தினார். 
    சுமார் 1000 முறை பல்வேறு சோதனைகள் செய்தபின்பும், அவரால் வெற்றிகாண முடியவில்லை. இருந்தபின்பும், முயற்சியைத் தளரவிடாமல் பல்பை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். முடிவில் மின்சார பல்பை கண்டுபிடித்தார்.

    இவரை சந்தித்த நண்பர்கள் பலர் இவரது வெற்றியைப் பாராட்டினார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் எடிசனிடம் ""நீங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகளைச் செய்து முடிவில்தான் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். 1000 முறை தோற்றபோது உங்களது மனம் மிகவும் வருத்தப்பட்டிருக்கும். தோல்விகள் உங்கள் முயற்சிகளை தடை செய்திருக்கும் அல்லவா'' என்று கேட்டார்.

    தாமஸ் ஆல்வா எடிசன் சிரித்துக்கொண்டே அந்த நண்பருக்குப் பதில் தந்தார்.
    ""நான் எனது தோல்விகளைப்பற்றி கவலைப்படவேயில்லை. எனது சோதனைகள் தோல்வியடையும் போதெல்லாம் நான் ஒரு சோதனையை எப்படி செய்யக்கூடாது என்பதை அறிந்துகொண்டேன். அந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன். அந்தத் தோல்விகள்தான் எனக்கு தொடர்ந்து முயற்சி செய்யும் சக்தியைத் தந்தன. இப்போது நான் வெற்றி பெற்றிருக்கிறேன்'' என்று பதில் தந்தார். இயேசு நம்முடன் இருக்கும்போது எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும் அதை வென்றெடுக்கலாம். 

    பரிசுத்த வேதாகமத்தில் பரிசுத்த பவுல் ""உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்'' (1கொரிந்தியர் 10:13) என்பதாக கூறியுள்ளார். 

    நாமும் சோதனையை சாதனையாக மாற்ற இறைமகன் இயேசு நம்முடன் இருக்க வேண்டும். அவ்வாறு இயேசு நம்முடன் இருக்க நாம் செய்யவேண்டியது அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம்,விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இந்த பிரமாணங்களை கைக்கொண்டு கர்த்தருக்குள் நிலைத்திருக்க வேண்டும். இவ்வாறு வாழும்போது நாமும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும்.

    - ஒய். டேவிட் ராஜா
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai