Enable Javscript for better performance
நிகழ்வுகள்- Dinamani

சுடச்சுட

    

    திருக்கண்டியூரில் திருப்பவித்ரோத்சவம்
    108 வைணவ திவ்ய தேசங்களீல் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்டியூர் அருள்மிகு கமலவல்லித் தாயார் உடனுறை அருள்மிகு ஹரசாப விமோசனப்பெருமாள் திருக்கோயில் தஞ்சாவூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பிரும்மனின் தலையைக் கிள்ளியதால் ஈசனுக்கு ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷம் இந்த தலத்தில் உள்ள பெருமாளால் நீங்கியது. 
    இக்கோயிலில் வந்து தரிசனம் செய்வோர்களின் தோஷங்களை நீக்கி அருள் செய்யும் பெருமாளாக விளங்கும் அரசாப விமோசனப் பெருமாளுக்கு உலக நலன் வேண்டியும் வருடாந்திர பிராயச்சித்தமாகவும் திருப்பவித்ரங்கள் சார்த்தி யாக சாலை, ஹோமம் பிராயச்சித்த திருவாராதனம் வேதம் பிரபந்த சாற்றுமுறை ஆகியவைகளுடன் நடைபெறுகின்றது
    எதிர்வரும் 29.8.2016 திங்கள்கிழமை மாலை பவித்ரம் சார்த்தப்பட்டு 30.8.2016, 31.08.2016, 1.9.2016 மற்றும் 2.9.2016 ஆகிய நாள்களில் தினமும் காலை மாலை வேளைகளில் ஹோமமும் மாலை வீதிப்புறப்பாடும் நடைபெறுகின்றது. 
    2.9.2016 அன்று இரண்டு வேளையும் மஹாசாந்தி ஹோமமும்; 3.9.2016 அன்று காலை ஹோமம் முடிந்து பூர்ணாஹுதி, கருட சேவை, தீர்த்தவாரியும் நடைபெறும். மாலை கட சம்ப்ரோக்ஷ்ணம், பெரிய சாற்றுமுறையும் நடைபெறும். தினமும் ததியாராதனையும் நடைபெறுகின்றது. பக்தர்கள் இந்த பவித்ரோத்சவத்தில் பங்கு கொள்ளுவதால் மனமும் மெய்யும் தூய்மையாகி பவித்ரமடையலாம். 
    - இரா. இரகுநாதன்                                                                                               
    குருபூஜை
    திருச்சி, வரகனேரி, குழுமிக்கரை ஸ்ரீ மாணிக்க சுவாமிகள் மடாலயத்தில் ஸ்ரீலஸ்ரீ பெரிய மாணிக்க சுவாமிகளுக்கும், ஸ்ரீலஸ்ரீ சின்ன மாணிக்க சுவாமிகளுக்கும் குருபூஜை நடைபெறுகின்றது. 
    தொடர்புக்கு: 98657 21701.
    நாள்: 27.8.2016.
    மண்டலாபிஷேக நிறைவு விழா
    காஞ்சிமாவட்டம், மதுராந்தகம் வட்டம், சித்ரவாடி கிராமத்தில் மலைமேல் உள்ள நரசிம்மர் ஆலயத்திலும், மலை அடிவாரக் கோயில்களுக்கும், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்திலும் கடந்த ஜுலை 10 ஆம் தேதி மகாசம்ப்ரோஷண வைபவம் சிறப்பாக நடந்தேறியது. தொடர்ந்து நடைபெற்றுவந்த மண்டலாபிஷேக பூஜைகள் ஆகஸ்டு -28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறுகிறது.  
    தொடர்புக்கு : 044-27540074.
    குருபூஜை
    திருவாரூர், வன்மீகபுரம் என்னும் மடப்புரத்தில் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் 181 ஆவது ஆண்டு குருபூஜை மகோற்சவம் மகாபிஷேகம், மகேஸ்வர பூஜை போன்ற வைபவங்களுடன் நடைபெறுகின்றது. 
    தொடர்புக்கு: 94434 36393.
    நாள்: 3.9.2016.
    விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவம்
    தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், மெலட்டூர் அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவம் ஆகஸ்டு -26 முதல் செப்டம்பர் -5 வரை நடைபெறுகின்றது. செப்டம்பர் -2 ஆம் தேதி, 7 ஆம் திருநாளன்று சித்தி புத்தி தேவிகளுடன் விநாயகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. 
    தொடர்புக்கு : 98449 96444.
    திருப்பணி
    சென்னை, வேளச்சேரியில் உள்ள ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீ காரியசித்தி ஆஞ்சநேயர் ஆலயத்தில் புனருத்தாரண வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருளைப் பெறலாம். 
    தொடர்புக்கு: 044-22433879 / 96000 03651.
    ***********************
    குழந்தை பாக்கியம் தரும் அற்புதத் தலமாக விளங்குகின்றது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திப்பிராஜபுரம் மாடாகுடி ஆற்றுபாலம் கிழக்கில் உள்ளது சென்னியமங்கலம் கிராமம். இங்கு பூமியில் புதைந்திருந்த இரண்டு சிவலிங்கங்கள் எடுக்கப்பட்டு ஓலை கொட்டகையில் வைத்து கிராமத்தினர் பூஜை செய்து வருகின்றார்கள். இந்த இரட்டை லிங்கேஸ்வரர்கள், அண்ணாமலையார், சொக்கநாதர் என திருநாமம் சூட்டப்பெற்று கோயில் அமைக்கும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு இறைவனின் அருளைப் பெறலாம். 
    தொடர்புக்கு: 94430 86587/ 81242 47647.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai