Enable Javscript for better performance
வியாசர்பாடி ஆரோக்கிய அன்னை..!- Dinamani

சுடச்சுட

    
    11

    சென்னை, வியாசர்பாடி, சாஸ்திரி நகர், புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் வரலாறு சிறப்புமிக்கது. பர்மாவில் இருந்து நாடு திரும்பிய அகதிகள் இங்கு வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததால், சகாய அன்னைக்கு கெபி அமைத்து ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். இதன்படி, 24.4.1966-இல் விழா கொண்டாடப்பட்டு, குடிசை ஆலயமாக உருவானது.

    பின்னர், சாஸ்திரி நகருக்கு அருகேயுள்ள பக்தவச்சலம் காலனியில் அன்னை பாத்திமாவுக்கு சிற்றாலயமும், கக்கன்ஜி காலனி, தோமையார் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு சிற்றாலயமும் கட்டப்பட்டன.

    பர்மாவில் உள்ள ரங்கூனில் அகதியாக குடிபெயர்ந்தோர் நடத்திய புனித ஆரோக்கிய அன்னையர் விழாவை 1966 ஆம் ஆண்டுமுதல் சாஸ்திரி நகரிலும் கொண்டாடுகின்றனர்.  புதிய கட்டடத்தில் உருவாக்கப்பட்ட ஆலயம் 1972- இல் தொடங்கப்பட்டது. இந்த ஆலயத்துக்கு அருகே வழிபாட்டுக்காக புதியதாக ஆலயமும் கட்டப்பட்டு 19.3.1984-இல் திறக்கப்பட்டது.

    ஆலயம் தொடங்கப்பட்ட 1966 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாலை தேர் பவனி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 7-ஆம் தேதி தேர்பவனி, திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 8-ஆம் தேதி கொடியேற்றம் இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai