சுடச்சுட

  
  islamic

  இஸ்லாமிய மூன்றாம் கலீபா உமர் (ரலி) ஆட்சி செய்தபோது ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றவாளி ஒருவன் அவர் முன்நிறுத்தப் பட்டான். வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கும் முன் குற்றவாளி குடிக்கத் தண்ணீர் கேட்டான். தண்ணீர் கொடுக்க அரசர் உத்தரவிட்டார். "இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறாய்?'' என்று குற்றவாளியிடம் கேட்கப்பட்டது. "நான் இந்தத் தண்ணீரைக் குடித்து முடிக்கும்வரை அரசர் தங்கள் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்'' என்றான். குற்றவாளி, "ஆகட்டும்!' என்றார் அரசர். திடீரென குடிநீர் முழுவதையும் தரையில் கொட்டி விட்டான் குற்றவாளி. கலீபா தான் கொடுத்த வாக்கிற்கிணங்கத் தீர்ப்பைத் தவிர்த்துக் குற்றவாளியை விடுதலை செய்தார்.

  நான்காம் கலீபா அலி (ரலி) யிடம் ஒரு வழக்கு வந்தது. ஒரு முதியவர் தான் இறக்கும் பொழுது தன் சொத்து பதினேழு ஒட்டகங்களையும் தன் மக்கள் மூவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் உயில் வைத்திருந்தார். இந்த வழக்கை யாராலும் விசாரித்துத் தீர்ப்பளிக்க முடியவில்லை.

  அலி (ரலி) யிடம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. தன் ஒட்டகங்களில் ஒன்றைக் கொணர்ந்து பதினேழு ஒட்டகங்களுடன் சேர்த்து பதினெட்டு ஒட்டகங்களையும் மூவருக்கும் ஆறு ஒட்டகங்கள் வீதம் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தார் கலீபா அலி (ரலி).

  - த.மு.ஷா. காஜாமுகைதீன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai