பனிப்பொழிவில் பாவை பாசுரங்கள்!

தமிழ் வருடம் 12 மாதங்களை கொண்டது. இதனை ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன புண்ணியகாலம் (சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம்) என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை
பனிப்பொழிவில் பாவை பாசுரங்கள்!

தமிழ் வருடம் 12 மாதங்களை கொண்டது. இதனை ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன புண்ணியகாலம் (சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம்) என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்திராயண புண்ணியகாலம் (சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம்) என்றும் நம் முன்னோர்கள் விஞ்ஞான அடிப்படையில் தெளிவாக இரு அயனங்களாக பிரித்துள்ளார்கள். மஹாபாரதம், பீஷ்மப் பிதாமகர் தட்சிணாயனத்தில் வீழ்ந்தாலும் அம்புப்படுக்கையில் உத்திராயணம் வரை இருந்து இறையடி சேர்ந்தார் எனக் கூறுகிறது.
ஆடி மாதம் 1-ஆம் தேதி கடக ரவி (தட்சிணாயன) புண்ணியகாலமாக பிறக்கிறது. இந்த 6 மாத தட்சிணாயன காலத்தை "வர்ஷ, சரத் மற்றும் ஹேமந்த' ருதுக்களாக மூன்றாய் ஒன்றன் பின் ஒன்றாய் வருவது போல் பிரித்து இதனை தேவர்களின் இரவு நேர மாதங்கள் ஆக்கினார்கள். தட்சிணாயனத்தில் கடைசி மாதம் இந்த மார்கழி ஆகும். இதனை தனுர் மாதம் என்றழைக்கின்றார்கள். தனுர் மாதம் என்பதை மலையாளத்தில் மட்டுமே குறிப்பிடுகிறார்கள். இது சமஸ்கிருதச்சொல். சூரியன் தனுர் ராசியில் வரும் நாளை "தனுஷ் சங்கரமனம்' என்றும் விஷ்ணுவிற்கு உகந்த நாளாகவும் இந்த நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டால் பேரானந்தம் அடையலாம் எனக் குறிப்பிடுகின்றார்கள். மாதங்களில் நான் மார்கழி என்றும் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையில் கூறுகிறார்.
ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் நம் மக்கள் சுப காரியங்கள் செய்வதை தவிர்கிறார்கள். அதனால் தெய்வங்கள் பார்த்தார்கள் நாம் உருவாக்கிய எல்லா மாதங்களுமே நல்ல மாதம் தான், இதில் பேதம் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் முகமாக ஆண் தெய்வங்கள் தனக்கு உகந்த மாதமாக மார்கழியையும் (திருவாதிரை மற்றும் வைகுண்ட ஏகாதசி) பெண் தெய்வங்கள் ஆடி மாதத்தையும் (நிறைய உற்சவங்கள் வருகிறது) எடுத்துக் கொண்டு அருளாட்சி செய்து வருகிறார்கள்.
இது பற்றி மஹாபெரியவா சொல்லும்போது இந்த மார்கழி மாதமானது தேவர்களுக்குகந்த மாதம். இந்த மாதத்தில் உஷத்காலத்தில் (காலை வேலை) பனிவிலகாத வேளையில் நம் உடலுக்கு உகந்த நல்ல சக்தி ஓசோனிலிருந்து வெளிப்படும். அது நம் உடலுக்குள் செல்ல ஏதுவாக நம் ஆண்டாள் பிராட்டியால் பாடப்பெற்ற திருப்பாவையிலுள்ள பாசுரங்களையும், மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவெண்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சியையும் வாயைத்திறந்து வெட்ட வெளியில் பாடிக்கொண்டு திருவீதியுலா வந்தால் அந்த ஓசோன் படலத்திலிருந்து வெளிப்பட்டு மார்கழிப் பனியின் ஊடே தங்கியுள்ள வாயு சக்தியானது; நம் உள்ளே சென்று நல்ல சக்தி பெருகும் என்ற விஞ்ஞான தத்துவத்தை மிக எளிமையாகக் கூறுகிறார். இதற்காக திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு ஒன்றினை நடத்தினார்கள்.
தேவர்களின் ஒரு நாள் என்பது நமக்கு ஒரு வருடமாகும்; அதாவது இரவு முடிந்து காலை பிறக்கும் வேளையைப்போல் இந்த மார்கழியானது முடிந்து (தட்சிணாயனம்) தை மாதம் உத்திராயண புண்ணியகாலம் பிறக்கிறது. அதனால் தான் தை பிறந்தால் வழிபிறக்கும் என்று முதுமொழி சொல்கிறது. வருடத்தில் பெüர்ணமி மற்றும் திருவாதிரை நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசனத்தை சிவனார் தில்லையில் நர்த்தனமாடும் திருக்கோலத்தில் நடராஜராக காட்சி தருகிறார்.
மார்கழியில் வைணவர்களுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியில் சொர்கவாசல் திறப்புவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- எஸ்.எஸ். சீதாராமன்


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com