பாலாற்றங்கரையில் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள்!

சோலைகள் சூழ வண்ணக் குயில்கள் கூவ, விரிந்து பரந்த பாலாற்றங்கரையில் எழுந்தருளி அருள்புரிகிறார் ஸ்ரீதேவி பூதேவி சமேத அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள்.

சோலைகள் சூழ வண்ணக் குயில்கள் கூவ, விரிந்து பரந்த பாலாற்றங்கரையில் எழுந்தருளி அருள்புரிகிறார் ஸ்ரீதேவி பூதேவி சமேத அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள்.
 காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அழகிய கிராமமான ஜமீன் பாண்டூர். இங்கு, கி.பி. 14 -ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் ஆதிகேசவப் பெருமாள் கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. ஒரு வேளை பூஜை மட்டும் வைகானச முறைப்படி செய்யப்படுகிறது.
 இவ்வாலயப் பெருமாள் நான்கு திருக்கரங்களுடன் ப்ரயோகச் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். இதுபோன்று, மூலவர் ப்ரயோகச் சக்கரத்துடன் நின்ற நிலையில் காட்சி தருவது அரியதாகும். ப்ரயோகச் சக்கரத்தை இந்தியாவில் அரிதாக சில கோயில்களில் மட்டுமே காணமுடியும். மேலும் இங்கு, கருடாழ்வார், அனுமார் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்திதியும் உள்ளன. ஆனால் அனைத்துமே சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.
 இத்திருக்கோயிலை புனருத்தாரணம் செய்ய விரும்பி ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளை மனம் குளிர காண வேண்டி கர்ப்பகிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், கருடர் சந்நிதி, அனுமார் சந்நிதி, மடப்பள்ளி மற்றும் நுழைவுவாயில் (ராஜகோபுரம்) அமைக்க திருப்பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 மேலும், இத்திருக்கோயிலில் ஆழ்வார், ஆச்சாரியார் இல்லாமையால், விஸ்வக்ஷேனர், நம்மாழ்வார், திருமங்கை மன்னன், ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோர் திருமேனிகளை பிரதிஷ்டை செய்யவும் ஆயத்தம் செய்யப்படுகிறது. இத்திருக்கோயில் திருப்பணியில் பக்தர்கள் பங்கு கொண்டு பெருமாளின் அருளுக்கு பாத்திரராகலாம்.
 இத்திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா, 14.12.2018 அன்று காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 98400 52735.
 - ஏ.ஆர். கோமேதகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com