பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

வெள்ளம் வரும் முன்னர் அணை கட்ட வேண்டும். யமன் வருமுன் விரைந்து அறம் செய்ய வேண்டும்
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* வீரன் போர்க்களத்தில் வெற்றிபெற்றால், அது அவனது வீரத்தால் வந்தது. கோழை தோல்வியுற்றால், அது அவனது கோழைத்தனத்தால் வந்தது. ஆனால், வீரன் தோற்பதும், கோழை வெற்றி பெறுவதும் விதியால் நடப்பன. "விதியை மதியால் வெல்ல முடியும்' என்பது உத்தரவாதமற்ற ஒரு நம்பிக்கை! ஆனால், குருவின் திருவருளால் விதியின் கொடுமையான சூடு தணிந்து அதன் சுடர் மட்டுமே நம்மீது படரும். இது சாத்தியம். 
- ஸ்வப்ரகாசம்

* வெள்ளம் வரும் முன்னர் அணை கட்ட வேண்டும். யமன் வருமுன் விரைந்து அறம் செய்ய வேண்டும்
- நன்னெறி

* கண்ணால் பார்ப்பதற்கு மாறாகப் பேசாதே. உலகத்தாரோடு இசைந்து நடந்துகொள்.
- ஆத்திசூடி

* ஒரு மனிதனுக்கு நீ செய்த உதவிகளை அவனிடம் நினைவூட்டிக் கொண்டிருப்பது, அவனைப் பழிப்பது போலாகும்.
- திருவள்ளுவர்

* வெற்றிடமாகக் கிடக்கும்படி வீட்டைப் பெரிதாகக் கட்டாதே. ஒருவர் குணத்தை அறிந்து நட்புக்கொள்.
- ஆத்திசூடி

* ஒருவன் உயர்வதும் தாழ்வதும் கல்வி அறிவினால் அல்லாமல் பிறப்பால் அல்ல.
- நன்னெறி

* உடன்பிறந்தவர்களில் தீமை செய்கிறவர்கள் இருக்கிறார்கள் அயலாரில் நன்மை செய்பவர்களும் இருக்கிறார்கள்.
- திருவள்ளுவர்

* எவன் அறிவின்மையால் மதுபானம் அருந்துகிறானோ, அவனைவிட்டு உடனே தர்மம் விலகும்.
- மகாபாரதம்

* செல்வக் குவியல்களும், சாம்ராஜ்ய பலமும் நிறைந்த மன்னர்களும், மாமன்னர்களும்கூட இறைவனின் அன்பு நிறைந்த ஓர் எறும்புக்குச் சமமல்ல.
- குருநானக்

* சிலந்தி அதன் வலையிலேயே சிக்கிக்கொள்கிறது. அது போன்று புலனின்பங்களுக்கு அடிமையானவர்கள் பேராசை என்னும் நீரோட்டத்தில் சிக்கிவிடுகிறார்கள்.
- புத்தர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com