வேதங்கள் போற்றும் சூரியன்!

சூரிய வழிபாட்டினை முறையாக மேற்கொள்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்; கண்ணொளி பிரகாசிக்கும்; சரும பாதுகாப்பு ஏற்படும்; இதயம் வலிமை பெறும் என்று வேதங்கள் கூறுகின்றன.
வேதங்கள் போற்றும் சூரியன்!

சூரிய வழிபாட்டினை முறையாக மேற்கொள்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்; கண்ணொளி பிரகாசிக்கும்; சரும பாதுகாப்பு ஏற்படும்; இதயம் வலிமை பெறும் என்று வேதங்கள் கூறுகின்றன. சூரியன் காலையில் ரிக் வேத சொரூபியாகவும் மதியத்தில் யஜூர் வேத சொரூபியாகவும் மாலையில் சாமவேத சொரூபியாகவும் திகழ்கிறான் என்று மந்திர சாஸ்திரம் கூறுகிறது.
 சூரியன், ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார். வசந்த காலத்தில் பொன் நிறத்திலும்; வெயில் காலத்தில் செண்கப்பூ நிறத்திலும்; மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும்; குளிர் காலத்தில் அடர்ந்த சாம்பல் நிறத்திலும்; முன்பனி காலத்தில் தாமரை நிறத்திலும்; பின்பனி காலத்தில் சிவப்பு நிறத்திலும் காட்சி அளிப்பார் என்று வேதங்கள்கூறுகின்றன.
 - டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com