Enable Javscript for better performance
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்- Dinamani

சுடச்சுட

    
    v2

    * இறைவனே! ஆற்றல் அனைத்தும் உடையவனே. நான் உங்களுடைய நட்பைப் பெற்றேன். ஆதலால் ஒன்றுக்கும் பயப்படமாட்டேன்.
    - ரிக் வேதம்
    * நாம் தீய வழியில் ஈட்டும் பொருள், இந்த உலகில் நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறது. ஆனால் அதே பொருள் நம் மரணத்திற்கு பிறகு, நாம் கொடும் துன்பங்களை அனுபவிக்கக் காரணமாக அமைகிறது. ஆகவே நிரந்தர ஆனந்தத்தைப் பெற விரும்புபவர்கள், தீய வழியில் பொருளை ஈட்டவே கூடாது.
    - மகரிஷி அத்ரி
    * பொன், மண், பெண் ஆகியவையே சண்டையின் மூல காரணங்கள்.
    - நீதி சாஸ்திரம்
    * ஒரு செம்படவன் வலையில் மீன் சிக்குவதைப் போல, ஈசனும் ஆன்மாவின் பக்தி வலையில் அகப்படுவான்.
    - ஞானரத்னாவளி
    * சுகத்திலிருந்துதான் வேதனை பிறக்கிறது. சுகத்திலிருந்துதான் பயம் பிறக்கிறது. சுகத்திலிருந்து விடுபட்டவன் வேதனையையோ பயத்தையோ அறியான்.
    * கோவணாண்டிக் கோலமோ, ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடப்பதோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பதோ ஆசையை வெல்லாத ஒருவனைப் பரிசுத்தவனாக்கி விடாது. 
    - புத்தர்
    * எந்த ஜீவனும் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும். எந்த ஜீவனுக்கும் எந்தத் துன்பமும் ஏற்படக் கூடாது. பிரபஞ்சம் முழுவதுமே மோட்சத்தை அடைய வேண்டும். இவ்விதம் விரும்புகிற மனப்பான்மையைத்தான் நட்பு உள்ளம் என்று சொல்வார்கள்.
    - யோகசாஸ்திரம்
    * புத்திசாலியான ஒருவன் தனக்குத் தொடர்பில்லாததை ஒதுக்கிவிட வேண்டும்.
    - பஞ்சதந்திரம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai