Enable Javscript for better performance
எமதர்மனுக்கு கோயில்!- Dinamani

சுடச்சுட

    

    வைகாசிமாத பௌர்ணமியன்று எமதர்ம ராஜன் அவதரித்ததாகப் புராணம் கூறுகிறது. எனவே, விசாகப் பௌர்ணமி அன்று எமதர்மராஜனை நினைத்து வழிபட்டால் நோய், நொடி இல்லாமல் ஆரோக்கியமுடன் வாழலாம். மேலும் எதிர்பாராத விபத்துகள் ஏற்படாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
     "காலன்' என்று சொல்லப்படும் எமதர்மராஜன் மூலவராக எழுந்தருளியிருக்கும் கோயில்கள் சில தமிழகத்தில் உள்ளன. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த திருச்சிற்றம்பலம் என்னும் இயற்கை எழில் சூழ்ந்த கிராமத்தில் எதர்மராஜனுக்காக தனிக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில் எருமை வாகனத்தில் எமதர்மராஜனின் கீழ் வலது கையில் தீச்சுடரும் இடது கையில் ஓலைச் சுவடிகளும் மேல் வலது கையில் சூலாயுதமும் இடது கரத்தில் "கதை'யுடனும் அருள்புரிகிறார். பரிவாரத் தெய்வங்களாக பாம்பாட்டி சித்தரும் அய்யனாரும் உள்ளார்கள்.
     சுமார் 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருக்கோயிலாகும். தர்மநெறி தவறாதவராக இருப்பவர்கள் "எமன்' என்று போற்றி வழிபட்டால் பாபங்கள் மன்னிக்கப்பட்டு பூலோகத்திலும் எமலோகத்திலும் கடுமையான தண்டனை மற்றும் துன்பங்கள் குறையும் ஞானநூல்கள் கூறுகின்றன. அதனால்தான் இங்கு எமதர்மராஜனுக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.
     இக்கோயிலின் வடபுறத்திலிருக்கும் புனித குளத்தில் பெண்களின் நிழல் கூட பட்டதில்லை என்கின்றனர்.
     பிறரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், பகை, பயம் உள்ளவர்கள், நோயினால் அவதிப்படுபவர்கள், அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள், விபத்து பயம் உள்ளவர்கள் இங்கு, எமதர்மராஜனை வழிபட்டு பலம் பெறுகிறார்கள். மேலும் பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நீடூழி நிலைக்க எருமைப்பால் நிவேதித்து பலன் பெறுவது கூடுதல் சிறப்பாகும்.
     - டி.ஆர். பரிமளரங்கன்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai