Enable Javscript for better performance
சோகத்தைத் தீர்க்கும் சோமநாதர்!- Dinamani

சுடச்சுட

    
    v4

    மதுரை சொக்கேசன்- மதுரை ராணி மீனாட்சியின் நாயக்க வம்சத்திற்கு பின் திண்டுக்கல் முகமதிய தளபதிகள் மதுரையை கைப்பற்ற முனைந்தனர். சிவகங்கை மன்னர் சசிவர்ணரும், சேது காவலரும் துணுக்குற்றனர். சேது சேனை வீரத்திற்கு இலக்கணம் வகுத்த தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரன் தலைமையிலும், சிவகங்கை மறவர்படை விவேகத்தின் விளக்கமாக திகழ்ந்த பிரதானி தாண்டவராயபிள்ளை தலைமையிலும் எழுந்தது. போர் முரசு ஆர்ப்பரித்தது. அவர்கள் ஆலவாய் அண்ணலையும் அங்கயற்கண்ணியையும் தக்க பாதுகாப்புடன் மானாமதுரைக்கு கொண்டு வந்து சோமநாதர் திருக்கோயிலில் பாதுகாப்பு செய்தனர். நாயக்க மன்னருக்கும் வெள்ளிக்குறிச்சி என்ற இடத்தில் அடைக்கலம் கொடுத்தனர். மதுரை தம்பதிகள் இரண்டு ஆண்டு காலம் இவ்வாலயத்தில் இனிது வீற்றிருந்தனர்.
     அருள்மிகு ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சோமநாதேஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ளது. இத்தலத்து இறைவன், சோமநாதரை நினைத்து வேண்டினால் வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் சோகங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை மனம் உருகி வேண்டினால் தொழுநோய்கள் குணமாகின்றன. சிவன் வெள்ளை சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
     வழித்தடம்: சிவகங்கையிலிருந்து தெற்கே 18 கி.மீ தூரத்தில் மானாமதுரை ஆலயம் உள்ளது.
     - பொ.ஜெயச்சந்திரன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai