Enable Javscript for better performance
நிகழ்வுகள்- Dinamani

சுடச்சுட

  

  அவதார உற்சவம்
  திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், கொரக்கை கிராமத்தில் எழுந்தருளி அருள் புரியும் ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் மே 11,12 - தேதிகளில் அவதார உற்சவம் (நான்காம் ஆண்டு விழா) நடைபெறுகின்றது. மே 11 -கருட சேவை, மே 12- திருமஞ்சனம் மற்றும் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகின்றன.
  தொடர்புக்கு: 94444 64902. 
  பிரம்மோற்சவப் பெருவிழா
  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், வடமாத்தூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை மதுரநாதீஸ்வரர் திருக்கோயிலில் 19.5.2018 முதல் 28.5.2018 வரை பிரம்மோற்சவப் பெருவிழா நடைபெறுகின்றது. அருள்மிகு மாணிக்க விநாயகர் ஆலயத்தில் 19.5.2018 முதல் 29.5.2018 வரை பிரம்மேற்சவப் பெருவிழா 
  நடைபெறுகின்றது. 
  தொடர்புக்கு: 97904 76666.
  ****************
  தஞ்சை மாவட்டம், பாபநாச வட்டம், திருக்கூடலூர் திவ்ய தேசத்தில் (ஆடுதுறை பெருமாள் கோயில்) உள்ள ஸ்ரீஜகத் ரட்சகப் பெருமாள் திருக்கோயிலில் வைகாசி விசாக பிரமமோற்சவம் மே 20- இல் கொடியேற்றத்துடன் துவங்குகின்றது. மே 23 -கருடúஸவை, மே 28 -திருத்தேர், மே 29 - திருமஞ்சனம். 
  தொடர்புக்கு: : 96598 80628 / 94430 06638.
  ***************
  கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், திருநாரையூர் கிராமத்தில் கோயில் கொண்டு விளங்கும் அருள்மிகு பொள்ளாப்பிள்ளையார், அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் 18.5.2018 முதல் 29.5.2018 வரை நடைபெறுகின்றது. 27.5.2018 - திருத்தேர்.
  தொடர்புக்கு: 98944 06321.
  குருபூஜை
  கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், திருநாரையூரில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை விழா, 19.5.2018 - அன்று, 108 குத்துவிளக்கு பூஜை, சிறப்பு வழிபாடுகளுடன் சமயச் சொற்பொழிவுகள், அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெறும். 
  *************
  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் 50 ஆவது பொன்விழா ஆண்டு சேக்கிழார் வைகாசிப் பூசப்பெருவிழா மே 15 -இல் தொடங்கி மே 20 வரை நடைபெற்றுவருகின்றது. 
  தொடர்புக்கு: : 0435 - 2463354.
  *************
  சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதீன மடாலய தேவாலய சமயப்பிரசார நிலையத்தில் உள்ள முத்தையா மணிவிழா மண்டபத்தில் மே 20 -ஆம் தேதி சேக்கிழார் சுவாமிகள் குருபூஜை விழா நடைபெறும். நேரம் மாலை 06.15 மணி. 
  தொடர்புக்கு: : 044 - 28142642.
  திருப்பணி
  ஈரோடு மாவட்டம், கோபி, நம்பியூர் தாலுக்கா, நம்பியூர்- காவிலிபாளையம் செல்லும் வழியில் கொமரபாளையம், சாய்நகரில் ஓம் ஸ்ரீ நாக சாயி ஈஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ சீரடியில் இருப்பதைப் போன்று மிகச் சிறப்பான முறையில் துனி, துவாரகமாயி அன்னதான கூடம் போன்றவைகளுக்கு திருப்பணி நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்கு கொள்ளலாம்.
  தொடர்புக்கு: 79048 42676. 
  ***********
  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், தஞ்சாக்கூர் ஸ்ரீ அரூப சக்தி ஞானாம்பிகை சமேத ஸ்ரீ பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயிலில் புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம், முன் மண்டபம், விநாயகர், சுப்ரமணியர், விஷ்ணு, மஹாலட்சுமி, ஸ்வர்ணாகர்ஷன பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்களுக்கான சந்நிதிகள், பரஞ்சோதி ஈசுவரர் கருவறை கோபுரம் கல் திருப்பணி ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. உற்சவர் நடராஜர், ஞானாம்பிகை, தட்சிணாமூர்த்தி சந்நிதிகள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 
  தொடர்புக்கு: 99449 40477 / 96294 99966.
  *************
  தஞ்சாவூர் மாவட்டம், கருக்கா கோட்டை, காசவளநாடு ஊரில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு திரௌபதை அம்மன் அருள்தரும் வீரனார் திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வெகுவிரைவில் கும்பாபிஷேகம் காண இருக்கும் இத்திருக்கோயிலின் திருப்பணியில் பக்தர்கள் பங்குகொள்ளலாம்.
  தொடர்புக்கு: 94427 29664.
  ஸ்ரீ சீதா கல்யாண மகோத்சவம்
  திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், 
  கண்டிரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கோதண்ட
  ராமஸ்வாமி, வரதராஜஸ்வாமி திருக்கோயிலில் மே 20- ஆம் தேதி மாலை 4.00 மணி அளவில் ஸ்ரீசீதாராமச்சந்திர சுவாமிக்கு திருக்கல்யாண மகோத்சவம் நடைபெறுகின்றது. 
  தொடர்புக்கு: 94437 48915.
  காஞ்சி மகா சுவாமிகள் ஜயந்தி
  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் கோலாகல 125- ஆவது மஹா அனுஷஜயந்தி மஹோத்சவம், ஸ்ரீ சந்த்ரசேரேந்த்ர ஸரஸ்வதி பக்த ஜன ட்ரஸ்ட் சார்பில் மே 24 முதல் ஜூன் 3 வரை, சென்னை, மேற்கு மாம்பலம், அயோத்யா மண்டபத்தில் நடைபெறுகின்றது. ஹோமங்கள். அனுஷ நட்சத்திரம் - மே 29. 
  தொடர்புக்கு: 044 2371 1931/ 98844 02391.
  ********************
  சென்னை விருகம்பாக்கம் நடேச நகரில் உள்ள ஸ்ரீ சிவவிஷ்ணு ஆலயத்தில் காஞ்சி மாமுனிவர் 125 ஆவது மஹா அனுஷ மகோத்சவம் மே 20 -இல் தொடங்கி மே 29 வரை நடைபெறுகின்றது. 
  தொடர்புக்கு: : 98400 94246.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai