Enable Javscript for better performance
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்- Dinamani

சுடச்சுட

  
  v2

  * 1. பக்தர்களுடன் கூடி வாழ்தல். 2. பகவான் லீலைகளைச் சொல்லும் கதைகளைக் கேட்டு ஆனந்தமடைதல். 3.குருவின் சரணங்களை, புகழுக்கு ஆசைப்படாமல் வழிபடுதல். 4. தூய்மையுடன் பகவானின் தெய்விகக் குணங்களைப் பாடுதல். 5. வேதங்களில் கூறியுள்ளபடி, முழு நம்பிக்கையுடன் மந்திரங்களையும், பகவான் நாமங்களையும் ஜபம் செய்தல். 6. தன்னடக்கம், நல்வழியில் நடத்தல், அதிகப்படியான உலகக் காரியங்களைக் குறைத்துக்கொள்ளுதல், புண்ணிய புருஷர்களுடைய கடமைகளில் ஈடுபடுதல். 7. உலகம் அனைத்தையும் இறைவன் உருவமாக நினைத்து, பக்தர்களுக்கு சேவை செய்வதை, இறைவனிடம் உள்ள பக்திக்கு மேலானதாகக் கருதுதல். 8. கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைதல், கனவிலும் கூடப் பிறரிடம் குறை காணாமல் இருத்தல். 9. வேஷம் போடாமல் உண்மையில் எளிய வாழ்க்கை வாழ்ந்து, சந்தோஷமோ துக்கமோ ஏமாற்றமோ இல்லாமல் எப்போதும் இறைவனின் பாதங்களையே 
  நம்பியிருத்தல்.
  - துளசிதாசர்

  * இறைவன் நாமத்தைப் பாடுவதால்தான் எல்லோரும் துயரத்திலிருந்தும், தவறுகளிலிருந்தும் விடுபட்டு சாந்தியை அடைய முடியும்.

  * தன்னைப் பார்த்த அளவிலேயே பிறர் கிருஷ்ண நாமத்தை உச்சரிக்கும்படி செய்ய வல்லவன் யாரோ, அவனே சிறந்த வைஷ்ணவன் பக்தன். 

  * எள்ளளவேனும் பக்தியில்லாதவர்களின் சேர்க்கை, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டவர்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாகும்.

  * உண்மையான பக்தியும், தெய்வ நம்பிக்கையும் இல்லாதவன் செய்யும் பூஜைகளும், மந்திரக் கிரியைகளும், ஆடம்பர வழிபாடுகளும் வீணானவை.

  * இறைவனுக்குச் செய்யும் சேவை ஒன்றில்தான் உலக ஜீவன்கள் அனைத்தும் ஒன்றுபடுகின்றன. 
  - ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

  * துணியை நீரால் தூய்மை செய்யலாம். மனதிலுள்ள பாவமாகிய மாசைக் கடவுள் நாமத்தால் கழுவ வேண்டும். 

  * பக்தர்கள் எப்பொழுதும் முகமலர்ச்சியோடும், மனமகிழ்ச்சியோடும் இருக்கிறார்கள். பகவான் திருநாமங்களைக் கேட்பதனால் துன்பங்கள் தேய்ந்து போகின்றன.

  * அவன் யஜமானன், அவன் உண்மையான யஜமானன்; அவன் பெயரே உண்மைதான். அவனது குணங்களை வர்ணிக்க எவராலும் ஆகாது. மக்கள் "எனக்கு', "எனக்கு' என்று அவன்முன் கைநீட்டி இரந்துகொண்டே இருக்கிறார்கள். அந்த வள்ளலும் எவ்வளவு பேர் வந்து என்னென்ன கேட்டாலும் சிறிதும் அலுக்காமல் சலிக்காமல், அவரவருக்கு வேண்டியதை எடுத்து வழங்கிக் கொண்டேயிருக்கிறான்.

  * நான் அவன் திருமுன் போய் நிற்கும்போது என்ன காணிக்கை செலுத்துவது, எந்த வகையில் என்ன வார்த்தை பேசினால் அவனது கடைக்கண் பார்வை என்மீது விழும் என்பதே எனக்குள்ள பெரிய பிரச்னை. நாம் பொன்னான காலைப் பொழுதில் எழுந்து பகவானின் உண்மைத் திருநாமங்களை ஓதவும், அவனது சிறப்புகள் குறித்துச் சிந்திக்கவும் வேண்டும்.

  * முற்பகலில் செய்வதின் விளைவுகள் நமக்குப் பிற்பகலில் கிடைக்கின்றன. இந்தப் பிறவியில் நாம் செய்யும் காரியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவியில் நமக்கு உடல் அமைகிறது. ஆனால் மோட்சமோ, அவனது அருள் நோக்கைப் பெறும்போதுதான் கிடைக்கும்.
  - குருநானக்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai