பார்வையற்றவருக்கு பார்வை தந்த இயேசு!

பிறவியில் கண் பார்வை இல்லாதவருக்கு மருத்துவத்தால் பார்வை தர முடியாது. மருத்துவம் குணமாக்க முடியாத குறை என கூறுகிறது . ஆனால், ஆண்டவராகிய இயேசுவால் பார்வை அளிக்கக் கூடும்.

பிறவியில் கண் பார்வை இல்லாதவருக்கு மருத்துவத்தால் பார்வை தர முடியாது. மருத்துவம் குணமாக்க முடியாத குறை என கூறுகிறது . ஆனால், ஆண்டவராகிய இயேசுவால் பார்வை அளிக்கக் கூடும்.

""அவர் (இயேசு) போகையில் பிறவியில் பார்வையற்ற ஒரு மனுஷரைக் கண்டார். அப்போது இயேசுவின் சீடர்கள் இயேசுவை நோக்கி,  "இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம். இவன் செய்த பாவமோ இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ!' என்று கேட்டார்கள். இயேசு பதிலாக, அது இவன் செய்த பாவமுமல்ல. இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல. தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படி பிறந்தான் (யோவான்: 9: 1-3)  என்று சொல்லி அப்பிறவி பார்வையற்றவனை தனியே அழைத்துக் கொண்டுப் போய் உட்கார வைத்து அவன்மேல் தம் கையை வைத்து தம் அன்பை வெளிப்படுத்தினார்.

இயேசு, தரையில் உமிழ்ந்தார்.  மண்ணில் சேறு உண்டாக்கினார். அச்சேற்றை அவன் கண்களின் மேல் மெல்ல பூசினார். இயேசு அவனை நோக்கி ""சீலோவாம்'' குளத்தில் தம் சேறுப்படிந்த கண்களை கழும்படி கூறினார். இயேசுவின் சொற்படி சீலோவாம் குளத்தில் போய் கழுவினான். என்ன அற்புதம் அவன் பிறவி குருடு நீங்கி இரு கண்களும் பார்வைப் பெற்றான். முதன் முதல் உலகத்தைப் பார்த்தான். இயேசு சொன்னபடி கர்த்தரின் மகிமை விளங்கும்படி பார்வை பெற்று மகிழ்ந்தான்.

தன்னை குற்றபடுத்தின வார்த்தைகளையும் தம் சீடர்க்கு இயேசு சொன்ன பதிலையும் ""பாவம் குருடன்'' என்று பரிகாச, பரிதாப குற்ற வார்த்தை கேட்டவன், தன் மனம் நொந்து போனான். இயேசு ஆண்டவர் தன்னைத் தொட்டு  தனியே அழைத்துப் போனதும் தான் பாவி இல்லை; தன் பெற்றோரும் பாவி அல்ல. தன் மீது பரிவு காட்டும் ஒருவர் இருக்கிறார். தம் பிறவி பார்வையற்ற தன்மை தனக்கு வந்த தண்டனை, சாபம் அல்ல. சீடர்கள் பார்த்தபடி இயேசு பார்க்கவில்லை, இயேசு தொட்ட மாத்திரத்தில் ஒரு பரிவை, அன்பை, கருணையை, உணர்ந்தான்.
பார்வை பெற்ற அவன் ஆலயத்துக்கு சென்றான். இயேசு என்பவர் தனக்கு பார்வை கிடைக்கும்படி செய்ததை எல்லாருக்கும் கூறி மகிழ்ந்தான். 
ஆம், இயேசுவால் எல்லாம் ஆகும்; அவர் சொல்ல ஆகும்; அவர் கட்டளையிட நிற்கும்; அவர் மனிதர் போற்றும் கடவுள். இயேசுவிடம் வந்தால் எல்லா குறைகள் நீங்கும். பாவங்கள் மன்னிக்கப்படும். சாபங்கள் நீங்கும். மாறாத அன்பை தருவார். உயர்த்துவார். இப்பூலோக வாழ்வில் மகிழ்ச்சியும் நலமும் கிடைக்கும். நாமும் இயேசுவிடம் போவோம். எல்லா பிறவி குறைகளையும் போக்கிக் 
கொள்வோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com