பூரத்தில் பொங்கும் பூரிப்பு!

நவக்கிரகங்களுக்குரிய மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களில் 11 -ஆம் இடத்தில் பூரம் நட்சத்திரம் உள்ளது. தமிழிலும், மலையாளத்திலும் இதனை பூரம் என்று சொல்வதுபோல் சமஸ்கிருதத்தில் பல்குனி, பூர்வபல்குனி என்றும்
பூரத்தில் பொங்கும் பூரிப்பு!

நவக்கிரகங்களுக்குரிய மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களில் 11 -ஆம் இடத்தில் பூரம் நட்சத்திரம் உள்ளது. தமிழிலும், மலையாளத்திலும் இதனை பூரம் என்று சொல்வதுபோல் சமஸ்கிருதத்தில் பல்குனி, பூர்வபல்குனி என்றும், தெலுங்கில் புபா என்றும் சொல்கிறார்கள்.
 தமிழகத்தில் ஆடிப்பூரம் என்றால் உடனே அனைவரின் எண்ணங்களிலும் தவழ்வது ஆண்டாள் நாச்சியாரே ஆகும். ஸ்ரீவில்லிப்புத்தூர் உறை ரங்கநாதனின் பிரியமான தொண்டரான விஷ்ணுசித்தர் (இவரை பெரியாழ்வார் என்பர்); ரங்கனிடம் குழந்தை வரம் வேண்டினார். ப்ரமே பக்தி கொண்ட தன் தொண்டனின் குறையைப் போக்க நாரணனன் தன் விளையாட்டை தொடங்கினார்; தன் இல்லாள் லக்ஷ்மி தேவியை (பூமாதேவியின் அம்சமாக) ஒரு குழந்தையாய் பிறக்கச் சொல்லி; இவர் நந்தவனத்தில் பூ பறிக்கச் சென்றபோது அங்கு அக்குழந்தையைக் கிடத்தினார். பேரானந்தமடைந்தார் பெரியாழ்வார். அந்தக் குழந்தை வளர்ந்து கோதை நாச்சியாரானாள். ஆண்டவனின் மனதை கொள்ளை கொண்டதனால் ஆண்டாள் ஆனாள். இந்த நாளை ஆடிப்பூர விழாவாக ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து வைணவ ஆலயங்களில் 10 நாள்கள் கொண்டாப்பட்டு, 10 -ஆம் நாள் ஸ்ரீ ரங்கநாதருக்கும் சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஸ்ரீஆண்டாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
 அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடிப்பூரத் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இது தேவிக்குரிய நாள் ஆகையாலும்; ஆடி மாதத்தில் பூர நட்சத்திரம் உச்சமாக இருக்குமாதலால்; இந்த நாளில் சித்தர்களும், யோகிகளும் தங்களது தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன. அம்மனுக்கு விரதமிருந்து பொங்கலிட்டு, கூழ்வார்த்து, விதவிதமான வர்ணங்களில் வளையல்களால் அலங்கரித்து, அனைத்து சுமங்கலிப் பெண்களுக்கும் கொடுத்து மகிழ்வதனால் செல்வம் மற்றும் மாங்கல்ய பாக்யம் பெருகும் என்பதும், வளையல் வாங்கித் தந்தால் சிறந்த பலனை அடையலாம் என்பதும் நம்பிக்கை.
 காவிரிக்கரையோர கிராமங்களில் ஆடி 18 -ஆம் நாள், மகிழ்ச்சியில் பொங்கிப் பெருகி வரும் காவிரிக்கு ஊர் மக்கள் எல்லோரும் ஜாதி பேதமின்றி ஒற்றுமையாக தன் சக்திக்கு தகுந்தார்ப்போல் தேங்காய் சாதம், புளிசாதம், எலுமிச்சம்பழ சாதம், சர்க்கரைப் பொங்கல் இவைகளை வீட்டில் செய்து, காவிரிக்குச் சென்று அவளுக்கு படைத்து, அந்த பிரசாதத்தை சாப்பிட்டு பின் கும்மி, கோலாட்டம் ஆடி அவளை மகிழ்வித்து வீடு திரும்புகிறார்கள். இதனை "ஆடிப்பெருக்கு' மற்றும் "பதினெட்டாம் பெருக்கு' என்றழைக்கிறார்கள். இதனால் காவிரித்தாய் சந்தோஷமடைந்து ஆர்ப்பரித்து ஓடுவதாக ஐதீகம். இந்த நாளில் புது மணத்தம்பதிகள் காவிரித்தாய்க்கு படையலிட்டு, கணவனின் ஆயுள் நீட்டிப்புக்காக அந்த புது மணப்பெண்ணின் "தாலிபிரித்து கோர்த்து' வழிபட்டு செல்வார்கள். ஒவ்வொரு வருடமும் ஆடி 18 -ஆம் பெருக்கிற்கு ஸ்ரீரங்கம் திருக்கோயிலிலிருந்து உற்சவர் நம்பெருமாள் காவிரி அன்னைக்கு தாய்வீட்டு சீதனமாக சீர்கொண்டு செல்வது இங்கு குறிப்பிடத்தக்கது.
 குறிப்பாக, உத்திரபிரதேசம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இந்த நாள் ஆஷாட மாதத்தில் வருவதால் வெளி நடமாட்டம் குறைக்கப்பட்டு, வெளி ஊர்களுக்குச் சென்ற அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்று கூடி பூர நாளன்று ஒரு சந்தோஷப் பூரிப்பில் "ஸ்வர்ணகெளரி விரதம்' என கொண்டாடி மகிழ்கின்றனர். மஞ்சள் பொடியைக்கொண்டு கெளரியம்மனை செய்து அதனை அலங்கரித்து சுத்தமாகவும் அர்ப்பணிப்புடனும் இந்த அம்மனை தட்டில் வைத்து ஊர்வலமாக எடுத்துச்சென்று பின் தன் வீட்டிற்கு உள்ளே அனைவரும் நுழையும்போது மங்கள ஹாரத்தி எடுத்து உள்ளே நடுக்கூடத்தில் வைத்து பலவகையான இனிப்பினால் ஆன தின்பண்டங்கள் மற்றும் பழவகைகள் படைத்து குடும்பமே வணங்கி மகிழ்வார்கள்.
 மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் கொண்டாடப்படும் ஆடிப்பூர விழாவிற்கு செவ்வாடை பக்தர்கள் பல மாநிலங்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டு அந்த ஜோதி வடிவத்தை கண்டு வணங்குகிறார்கள். இந்த வருடம், பெண்கள் பண்டிகைகளான ஆடிப்பூரமும், பதினெட்டாம் பெருக்கும் ஒரே நாளில் (ஆகஸ்ட் -3 ) வருவது மிகவும் சிறப்பானது.
 - எஸ். எஸ். சீதாராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com