பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

ஒரு சக்கரத்தால் மட்டும் ரதத்தை ஓட்ட முடியாது. அதுபோல் அதிர்ஷ்டம் இருந்தும், சுயமுயற்சி இல்லையென்றால் செயல்களில் நாம் வெற்றி பெற முடியாது.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* ஒரு சக்கரத்தால் மட்டும் ரதத்தை ஓட்ட முடியாது. அதுபோல் அதிர்ஷ்டம் இருந்தும், சுயமுயற்சி இல்லையென்றால் செயல்களில் நாம் வெற்றி பெற முடியாது.
- யாக்ஞவல்க்ய ஸ்மிருதி
* சைதன்ய (ஞான) சொரூபமாக இருப்பது பிரம்மம், உலகம் முழுவதுமே பிரம்மம், எல்லாவித மூலப் பொருள்களும் பிரம்மம், நானும் பிரம்மம், என் பகைவரும் பிரம்மம், என் நண்பர்களும் சுற்றத்தாரும் பிரம்மம். 
- வசிஷ்டர் (யோகவாஷிட்ட சாரம்)
* ஆத்மா என்பது ஒரு பெரிய சமுத்திரம். கை கால் முதலிய புலன்கள் அதில் மிதக்கும் பனிக்குன்றுகள். ஞான
சூரியன் உதயமானதும் அவை ஆத்மாவில் கரைந்து நாம ரூபாதிகளை (பெயர், உருவம்) போன்றவைகளை இழக்கின்றன.
- வேதாந்தம்
* மனம் பற்றற்ற நிலையை அடைந்தால் இறைவனைக் காணலாம். தூய மனதில் இறைவனின் குரலே எழுகிறது. இறைவனை அனுபூதியில் உணர்ந்தால் தர்மம், அதர்மம் ஆகிய இரண்டையும் கடந்து செல்ல முடியும்.
- ஸ்ரீ ராமகிருஷ்ணர்
* சேராததை முடித்து வைப்பது எதுவோ, அதுதான் மாயை. எது இன்னதென்று சொல்ல முடியாதோ அதுதான் மாயை. 
- வடமொழி சுலோகம்
* பக்தியோகம் செல்லும் மார்க்கத்தை ஒட்டிப் பலவிதமாகக் கருதப்படுகிறது. இயற்கையான குணங்களின் போக்கை ஒட்டி மனிதர்களின் பக்தி மனநிலையும் வேறுபடுகிறது.
- பாகவதத்தில் கபிலர் தன் தாயாகிய தேவஹுதிக்குக் கூறிய பக்தியோகம்
* மனிதன் தன் மனதை அறிய விரும்புவதில்லை. பிறர் குற்றங்களைக் காண்பதையே அவன் விரும்புகிறான். அவன் தனது குற்றங்களை விலக்குவதற்கு முயற்சி செய்வானானால் பிறர் குற்றங்களைக் காணும் தேவையற்ற குணம் அவனிடமிருந்து விலகிவிடும்.
- ஸ்ரீ சாரதாதேவியார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com