நிகழ்வுகள்

 திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி மதுரா பைரவபுரம் கிராமத்தில் அருள்மிகு சொர்ணகால பைரவர் திருக்கோயில் அமைந்துள்ளது.

நாமசங்கீர்த்தனம்
 சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஆஸ்தீக சமாஜம் வளாகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்யார் சுவாமிகளின் தனுர்மாத பூஜையின் போது, பிரபல பாகவ தோத்தமர்கள் தங்கள் குழுவினருடன் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சியை நடத்துகின்றார்கள். இந்த வைபவம், மார்கழி 1 முதல் 30 வரை அதாவது, டிசம்பர் 17 முதல், 2020 ஜனவரி 14 வரை தினசரி காலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகின்றது. டிசம்பர் 23 -ஆம் தேதி ஸ்ரீ மகாபெரியவா ஆராதனை நடைபெறும்.
 தொடர்புக்கு: 98848 77929.
 சாமவேத பாராயணம்
 உலக நன்மையை வேண்டி கும்பகோணம் அருகில் கோவிந்தபுரம் கீழசாலை, திருப்பணிப்பேட்டையில் உள்ள காஞ்சி ஸ்ரீ மகாசுவாமி தபோவனத்தில் டிசம்பர் 19 முதல் 24 வரை ஸ்ரீவெங்கடேச ஸ்ரௌதிகள் தலைமையில் சாமவேத பாராயணம் நடைபெறுகின்றது. இந்த தபோவனத்தில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் தொடங்கி அவருக்கு முன் அப்பீடத்தை அலங்கரித்த 67 குருமார்களுடன் கூடிய ஸ்ரீ காஞ்சி மகா சுவாமிகள் சிலா திருமேனிகளை தரிசனம் செய்யலாம்.
 தொடர்புக்கு: 73586 29948 / 99410 36399.
 அச்சன் கோயில் மண்டல உத்சவம்
 கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்தபடி அச்சன் கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. இங்கு வனராஜனாக அரசகோலத்தில் ஒரு கையில் சந்தனமும் கருப்பனின் காந்தமலைவாளும் ஏந்தி சாஸ்தாவாக பூரணாபுஷ்கலை தேவியருடன் கல்யாண சாஸ்தாவாக காட்சித் தருகிறார் ஐயப்பன். இவ்வாண்டு, நடைபெறும் மண்டல உற்சவ நாள்கள் டிசம்பர் 16 - திருவாபரணம் வருகை, டிசம்பர் 17 - கொடியேற்றம், டிசம்பர் 25 - தேர், டிசம்பர் 26 - ஆராட்டு, டிசம்பர் 19 முதல் 24 வரை இரவு கருப்பன் துள்ளல். பத்து நாள்களிலும் அன்னதானம் உண்டு.
 திருக்கல்யாண மகோத்ஸவம்
 பாகவத சம்பிரதாயப்படி பஜனை பத்ததியில் ஸ்ரீ பூர்ணா புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கல்யாண மகோத்சவம் டிசம்பர் 29 - அன்று தியாகராய நகர் வடக்கு போக்ரோடில் உள்ள காந்திமதி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகின்றது. டிசம்பர் 28 -ஆம் தேதி அன்று கணபதி ஹோமம், லட்சார்ச்சனை, சம்பிரதாய பஜனை, பூஜை, பாராயணங்கள், டோலோத்ஸவம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 தொடர்புக்கு: 98403 05141/ 97898 25596.
 ஸ்ரீபர்வதமலை கிரிவலம்
 ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் ஆசியுடன் ஸ்ரீ பர்வதமலை கிரிவலம் தொடங்கப்பட உள்ளது. இந்த பயணம் டிசம்பர் 17-ஆம் தேதி, காலை 6 மணி அளவில் போளூர் தாலுக்கா தென்மாதிமங்கலத்திலிருந்து கிளம்பி கிராமங்கள் வழியாக சுமார் 25 கி.மீ. நடந்து மறுபடியும் தென்மாதிமங்கலத்தை அடையும். 75 ஆண்டுகளுக்கு முன் (15.12.1944) ஸ்ரீ மகாசுவாமிகள் திருவண்ணாமலை சமீபம் உள்ள ஸ்ரீ மல்லிகார்ஜூன சுவாமி கோயில் கொண்டுள்ள பர்வதமலையை பல பக்தர்களுடன் கடலாடி முகாமிலிருந்து கிளம்பி சென்று கிரிவலம் செய்தார்கள். அவர் சென்ற பாதையிலேயே இந்த கிரிவலம் தொடங்கப்படுவது விசேஷமாகும். கிரிவலத்தில் பங்கு பெரும் பக்தர்கள் டிசம்பர் 16 -ஆம் தேதி இரவு தென்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள எம். ஆர். திருமண மண்டபத்திற்கு வந்து விட வேண்டும். திருவண்ணாமலையிலிருந்து மேல் சோழங்குப்பம் மற்றும் போளூரிலிருந்து செங்கம் செல்லும் பேருந்துகளில் தென்மாதிமங்கலம் (பர்வதமலை) வரலாம்.
 தொடர்புக்கு: 04175 - 238343 / 93448 06043.
 மகாகும்பாபிஷேகம்
 திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி மதுரா பைரவபுரம் கிராமத்தில் அருள்மிகு சொர்ணகால பைரவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் டிசம்பர் 15 - ஆம் தேதி காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் புதிதாகக் கட்டியுள்ள ஐந்து நிலை ராஜ கோபுரத்திற்கு மகாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. முன்னதாக, ஹோமங்கள் மற்றும் பூஜைகள் டிசம்பர் 12- ஆம் தேதி துவங்குகிறது.
 தொடர்புக்கு: 97871 43750/ 99437 84070.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com