பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

எந்த உயிரிடமும் அன்பாக இரு. அன்பே உயிரின் இயல்பு. எல்லாரிடமும் அன்புடன் பழகு. நீயும் வாழ். பிறரையும் வாழவிடு. இதுவும் அகிம்சையின் தத்துவம்.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* "நடந்து நடந்து காலும் சோர்ந்தது; கேட்டுக் கேட்டு வாயும் சோர்ந்தது; நினைத்து நினைத்து மனமும் சோர்ந்தது; இனி இந்தப் பாவி வயிற்றுக்கு என்ன செய்வோம்?' என்று கண்ணீர் வடிக்கும் ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்துக் கண்ணீரை மாற்றுவதே ஜீவகாருண்யம்.
- வள்ளலார்

* எந்த உயிரிடமும் அன்பாக இரு. அன்பே உயிரின் இயல்பு. எல்லாரிடமும் அன்புடன் பழகு. நீயும் வாழ். பிறரையும் வாழவிடு. இதுவும் அகிம்சையின் தத்துவம்.
- மகாவீரர்

* மனதின் மாசு பொறாமை; நாக்கின் மாசு பொய் பேசுதல்; கண்களின் மாசு பிறர் செல்வத்தையோ அவரது மனைவியின் அழகையோ உற்று நோக்குதல்; செவிகளின் மாசு பழிச் சொற்களைக் கேட்பது மறைமுகமாக இவற்றைச் செய்பவன் நன்கு கற்ற அறிஞனாயினும் நரகத்திற்கே செல்வான்.
- குருநானக் 

* நெஞ்சில் படியும் தீப்பொறியைவிட, மனதில் படியும் துவேஷம் விரைந்து பரவும்.
- புத்தர் 

* தர்மத்தாலும் கருணையாலும் எய்தப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கவல்லது. இதை அறியாதவர்கள் உலக சரித்திரத்தையும் இயற்கையின் விதிகளையும் அறியாதவர்கள் ஆவர்.
- மகாகவி பாரதியார்

* இந்த உலகில் எதுவரை ஏதோ ஓர் மூலையில், ஒரு பெரியவராவது நீராடி, காயத்ரி மந்திரம் சொல்லி, சூரிய பகவானுக்கு "அர்க்யம்' சமர்ப்பித்து, வணங்குகிறாரோ, அதுவரையில்தான் பூமியில் மழை பெய்யும்.

* அந்த ஒருவரும் இல்லாத நிலை ஏற்படும்போது, உலகில் மழை பெய்வதும் அடியோடு நின்றுவிடும். அனைத்து ஜீவராசிகளும் உயிருக்கு ஆதாரமாக விளங்கும் நீர் இல்லாமல், "தாகம்', "தாகம்' என்று தவித்து, அழியும். அதுவே கலியின் முடிவும் ஆகும்.
- ஸ்ரீ வேத வியாசர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com