பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

எழுந்திருங்கள்! விழித்துக்கொள்ளுங்கள்! சிறந்த ஆச்சாரியர்களைச் சென்றடைந்து ஞானத்தைப் பெறுங்கள்.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* "நான் இந்த உலக உணர்வுக்குக் கட்டுண்டவன், இதிலிருந்து விடுதலை அடைய விரும்புகிறேன்'' என்ற விருப்பம் எவனுக்கு உறுதியாக இருக்கிறதோ அவனே ஞானமார்க்க நூல்களைக் கற்பதற்குத் தகுதியுள்ளவன் ஆவான்.
- வசிஷ்டர் (யோகவாஷிட்ட சாரம்)
* நான் சொர்க்கத்தில் பிறப்பதை விரும்பவில்லை. வழிதவறிச் சென்றவர்களை மீட்கவும், இருளில் வாழ்பவர்களுக்கு ஒளியைக் கொடுப்பதற்கும், எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்காகவும், மனிதகுலத்தின் நன்மையை நாடுவதற்காகவுமே நான் மீண்டும் பிறக்க விரும்புகிறேன்.
- புத்தர்
* எழுந்திருங்கள்! விழித்துக்கொள்ளுங்கள்! சிறந்த ஆச்சாரியர்களைச் சென்றடைந்து ஞானத்தைப் பெறுங்கள்.
- கட உபநிஷதம்
* துன்புறுத்தப்பட்டாலும் இயற்கையாகத் தைரியம் படைத்தவனுடைய தைரியத்தை அழித்துவிட முடியாது. ஒரு தீவர்த்தியைக் கீழ் நோக்கிப் பிடித்தாலும் சுடர் ஒருபொழுதும் கீழ் நோக்கிச் செல்லாது.
- பர்துருஹரியின் நீதி சதகம்
* மயக்கம் அல்லது மறதியினால் தன் கழுத்தில் இருக்கும் ஆபரணம் தெரியாமல் போய்விடுகிறது. அந்த மயக்கம் தீர்ந்தவுடன் எவ்விதம் ஆபரணம் கழுத்தில் இருப்பது அறியப்படுகிறதோ, அது போலவே ஆத்மாவும் குருவின் சொற்களினால் அக்ஞானம் நீங்கியவுடன் அனுபூதியில் உணரப்படுகிறது.
- வசிஷ்டர் (யோகவாஷிட்ட சாரம்)
* மனம் அமைதியாக இல்லாவிட்டாலும்கூட, நீங்கள் ஓர் இடத்தில் அமர்ந்து இறைவன் நாமத்தைப் பத்து லட்சம் முறை ஜபம் செய்யலாம். ஆனால் இறைவனின் அருள் இல்லாமல் எதுவும் கிடைக்காது.
- ஸ்ரீ சாரதாதேவியார்
* ஆற்றுவெள்ளத்தைப் போலவே ஆயுள் எப்போதும் முன்னோக்கியே பாய்ந்துகொண்டிருக்கிறது. அது திசைமாறி, வந்த வழியிலேயே பின்னோக்கிப் பாய்ந்து செல்வது என்பது ஒருபோதும் நடைபெறாது. மனிதனின் ஆயுட்காலம் இடைவிடாமல் சுருங்கிக்கொண்டே இருக்கிறது. யாரும் மரணத்தைத் தடுக்க முடியாது. இந்த நிலையில் மனிதர்கள் மகிழ்ச்சியை நாடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் தர்ம வழியில் மனிதர்கள் மகிழ்ச்சியைப் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். 
- ஸ்ரீ ராமபிரான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com