பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

மரணத்திற்கு காமம், பேராசை, நாவடக்கம் இன்மை ஆகிய இந்த மூன்றும் நுழைவாயில்களாகும். இவை ஒருவனை ஆன்மிக வழியிலிருந்து விலக்கி மரணத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* மரணத்திற்கு காமம், பேராசை, நாவடக்கம் இன்மை ஆகிய இந்த மூன்றும் நுழைவாயில்களாகும். இவை ஒருவனை ஆன்மிக வழியிலிருந்து விலக்கி மரணத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன.
- ஆதிசங்கரர்
* குடி, கோபம், பிடிவாதம், மதவெறி, வஞ்சகம், பொறாமை, தற்புகழ்ச்சி, பிறரை இகழ்வது, ஆணவம், தீய எண்ணங்கள், புலால் உண்ணுதல் ஆகியவைதான் தூய்மையின்மையாகும்.
- புத்தர்
* வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் வருதல், கடுமையாகப் பேசுதல், பிறரை நிந்தித்தல், பொய் சொல்லுதல் ஆகியவை வாக்கினால் செய்யப்படும் தீய கர்மங்களாகும். இவற்றை ஒருவன் விட்டொழிக்க வேண்டும்.
- மகாபாரதம்
* பூர்வ புண்ணியம் எந்த மனிதனுக்கு நிறைய இருக்கிறதோ, அவனுக்குப் பயங்கரமான காடு தலைசிறந்த நகரமாகிவிடும்; எல்லா மக்களும் விரைவில் நண்பர்களாகிவிடுவார்கள்; பூமி முழுவதும் நல்ல நிதியும் ரத்தினங்களும் நிறைந்ததாகிவிடும்.
- பர்துருஹரியின் நீதி சதகம்
* சூரியன் உதிக்கும்போது மனிதன், "பொழுது விடிந்துவிட்டது, வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம்' என்று நினைத்து மகிழ்ச்சியடைகிறான். சூரியன் மறையும்போது அவன், "சம்பாதித்ததைக் கொண்டு சுகமாக வாழலாம்' என்று நினைத்து மகிழ்ச்சியடைகிறான். இவ்விதம் சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் மனிதன் மகிழ்ச்சியடைகிறான். ஆனால், "சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் காரணமாக, அவன் தனது வாழ்நாளில் ஒரு நாள் குறைந்து ஆயுள் குறுகி வருகிறது!' என்பதை அறிந்துகொள்வதில்லை.
- ஸ்ரீ ராமபிரான்
* ஒருவன் தனக்குத் துன்பம் நேர்ந்தபோதும் பிறர் மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளை ஒருபோதும் பேசக் கூடாது, பிறருக்குத் துரோகம் செய்யும் எண்ணம் உள்ளவனாக இருக்கக் கூடாது, எந்த வார்த்தையால் பேசுபவர்களைப் பார்த்து மற்றவர்கள் நடுங்குவார்களோ அந்த வார்த்தைகளைப் பேசக் கூடாது. 
- மனுஸ்மிருதி 
* எவன் சூரிய ஒளிக் கிரணங்களைச் சூரியனாகவே உணர்கிறானோ அவனே நிர்விகல்பன் எனப்படுகிறான். எப்படி நுரை, அலை, பனித்துளி, நீர்க்குமிழி ஆகியவை தண்ணீரிலிருந்து வேறுபட்டவையல்லவோ, அதுபோலவே இந்த உலகமும் ஆத்மாவிலிருந்து தோன்றியதுதான், வேறுபட்டதல்ல. பழங்கள், இலைகள், கொடிகள், மலர்கள், கிளைகள், வேர் முதலியவை மரத்தின் விதையில் உள்ளடங்கியிருக்கின்றன. அதுபோலவே, இந்த உலகத்தின் தோற்றமும் பிரம்மத்திடமே அடங்கியிருக்கிறது.
- வசிஷ்டர் (யோகவாஷிட்ட சாரம்)
* ஆசையை ஒழி. பொறுமையைக் கைக்கொள். கொழுப்பை அடக்கு. பாவத்தில் மனதைச் செலுத்தாதே. சத்தியத்தைப் பேசு. மதிப்புடையவர்களுக்கு மரியாதை செய். எதிரிகளைச் சமாதானப்படுத்து. உன் குணங்களைப் பிரகடனம் செய்யாதே. கீர்த்தியைக் காப்பாற்றிக்கொள். துன்புற்றவர்களுக்கு இரங்கு இதுதான் நல்லவர்களுக்கு அடையாளம்.
- பர்துருஹரியின் நீதி சதகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com