மெய்யே அருமருந்தாம்

தமிழ்த் தெய்வம் நம்முடைய உடலினை மெய்யென்றே கவின் செய்து நம் அனைவரையும் தனதாக்கிக் கொண்டு மெய் அருளாட்சி செய்கிறது. உடம்பானது

தமிழ்த் தெய்வம் நம்முடைய உடலினை மெய்யென்றே கவின் செய்து நம் அனைவரையும் தனதாக்கிக் கொண்டு மெய் அருளாட்சி செய்கிறது. உடம்பானது மிகவும் இயல்பாகத் தன்னுள்ளே வைத்திருப்பதை உள்ளது உள்ளவாறே சிறிதளவும் கூடப் பொய் உறைக்காமல் இயம்புவதினாலேயே மெய் எனப் பெயர் பெற்றுள்ளது.
 மேலும் இத்தகைய மெய்யானது தனக்குத் தேவையான உறுப்புகளையும் அவைகள் செயலாக்கம் பெறத் தேவையான அளவு சத்துகளையும் சீரிய முறையில் தாமாகவே பகிர்ந்து அளிக்கின்றது. மேலும் மெய் உறுப்புகளின் தொகுமொத்த இயக்க சக்திக்கே வழிவகை செய்கின்றது.
 அதுமட்டுமின்றி, தனக்கு ஏற்படும் பாதிப்புக்களையும் தன் முயற்சியினாலேயே சரிசெய்து கொள்கிறது. தனக்கு அந்நியப்பட்ட தேவையற்ற கழிவுகளையும் தன்னிலிருந்து வெளியேற்றுகிறது. தன்னைத் தானாகவே சரிசெய்து கொள்கிறது. இந்தவகையில் மெய்யானது படைத்தல், காத்தல், சீராக்குதல் முதலிய தன் இயக்கத்திற்குத் தேவையானவற்றையும் அதே சமயம், எந்த வகையிலும் தன் இயக்க சக்தி இயல்புக்கு மாறான அந்நியப் பொருட்களை எதிர்த்தல், அழித்தல், முதலிய செயல்களையும் செவ்வையாக ஓய்வறியாவண்ணம் செய்கிறது. மெய்யானது தனக்குத் தேவையான தமக்கு உரிய பசி, தாகம், உறக்கம், ஓய்வு முதலிய அறிவிப்புகளை நாம் உணரும் வண்ணம் தெரிவிக்கின்றது. இதுவே மெய்யின் மெய்யான மொழியாகும்.
 மெய்யின் தேவை அறிவிப்பின்படி பசி, தாகம், தூக்கம், ஓய்வு அமைந்தால் மெய்யின் ஆக்கச் சுற்று நிகழ்வுகள் இயல்பாகவும், சீராகவும் நிகழ்த்தப்பெற்று அனைத்து மெய் உறுப்புகளும் சமன் பெற்றுத் திகழும். இந்த வகையில் மெய் நமக்குப் பகரும் வழிவகைகளும் மற்றும் நாம் மெய்யிடம் மெய்யாக பேசுதலுமே மெய்யான மொழியாகும்.
 நாம் மெய்யிடம் அதன் செவ்வையாகத் தொகுமொத்த செயல்பாட்டிற்குரிய நன்றிகளையும், பாராட்டுதல்களையும், தெரிவித்தல் தமிழ்த் தெய்வம் நமக்கு வழங்கியுள்ள மெய்ப்பேச்சின் அமிழ்த நிலை வெளிப்பாடாகும். இந்த வகையில் நாம் மெய்யிடம் நடந்த தவறுதல்களுக்கு குறிப்பாக: மெய்-மனம்; மெய்-உயிர்; மெய்-பிரபஞ்ச சக்தி ஆகிய செயலாக்க நிலைகளில் நம்மால் இழைக்கப்பெற்ற தவறுதல்களுக்குரிய மன்னிப்புக் கோருதலே சிறந்ததொரு பாவ மன்னிப்புக் கோருதலுக்குரிய வழிமுறையாகும்.
 இந்த வகையில் பெருமைமிகு உயர்தனிச் செம்மொழியாம் நம் தமிழ்த் தெய்வம் நமக்குத் தந்தருளிய உயிர், மெய், உயிர்மெய், எழுத்துக்களின் உரிய பயன்பாடே நம்மை உய்விக்கும் அமிழ்த நிலை வெளிப்பாட்டிற்குரிய உயரிய வழிவகையாகும்.
 - பாஸ்கர்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com