பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

கோபம் வந்த மனிதன் கொடூரமான சொற்களினால் நல்லவர்களையும் பெரியோர்களையும் அவமானத்திற்குள்ளாக்குவான்.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* ஒருவனுடைய வளர்ச்சியும் அழிவும் அவனுடைய நாக்கைச் சார்ந்தே இருக்கிறது.
- சாணக்கியன்
* உலகத்தில் கோபம் வந்ததென்றால் அதன் விளைவாக பாவச் செயல்கள் செய்யாதவர்களைப் பார்க்க முடியுமா? கோபமுற்றவன் தன் குருவையே கொன்றுவிடுவானே!
* கோபம் வந்த மனிதன் கொடூரமான சொற்களினால் நல்லவர்களையும் பெரியோர்களையும் அவமானத்திற்குள்ளாக்குவான்.
- வால்மீகி ராமாயணம்
* பிறரிடம் தீய சொல் பேசுவது உனக்கு இன்பமானால், அவர்கள் உன்னைத் திருப்பித் தாக்குவதையும் நீ இன்பமாகவே கொள்ள வேண்டும். 
- புத்தர்
* சிறப்பான சமாதியைப் பயிற்சி செய்வதனால் தத்துவ ஞானம் உண்டாகிறது.
- நியாய தரிசனம்
* மனம் எதில் குறி வைக்கிறதோ அதை உடனே பெற்றுவிடுகிறது.
- யோக வாசிட்டம்
* தன் உள்ளத்திலிருந்து பொங்கி எழும் கோபத்தை நாகப்பாம்பு சட்டையை உரிப்பதைப்போல உதறிவிடக் கூடியவனே, உண்மையில் மனிதன் என்று சொல்லத்தக்கவன்.
- வால்மீகி ராமாயணம் 
* ஒருவனுக்கு அஹிம்சை கைவந்துவிட்டதென்றால், அவனை அணுகும் கொடிய பகைவனும் தன் பகையை மறந்து போவான்.
- யோகதரிசனம்
* இந்த உலகில் மேம்பாடும், பிறகு மோட்சமும் எதனால் எய்தப்படுமோ அதன் பெயரே தர்மம் என்பது.
- நியாய தரிசனம் 
* கோவணாண்டிக் கோலமோ, ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடப்பதோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பதோ ஆசையை வெல்லாத ஒருவனைப் பரிசுத்தவனாக்கி விடாது.
- புத்தர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com