Enable Javscript for better performance
நிகழ்வுகள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நிகழ்வுகள்

    By   |   Published On : 10th May 2019 10:00 AM  |   Last Updated : 10th May 2019 10:00 AM  |  அ+அ அ-  |  

    மஹா சம்ப்ரோக்ஷணம்
    காஞ்சி மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயிலிருந்து 5 கி.மீ தூரத்தில் கொளத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆமோதவல்லி நாயகி ஸமேத திருநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக்ஷணம் மே 16 - காலை 8.00 மணி அளவில் நடைபெறுகின்றது. இதையொட்டிய பூஜை, ஹோமங்கள் மே 14 - இல் தொடங்குகிறது. 
    தொடர்புக்கு: 94440 22133 / 99402 06679.
    ******************
    திருக்கல்யாண மகோத்சவம்
    திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசீதா லட்சுமண ஹனுமத் சமேத ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி சந்நிதியில் மே 19 - ஆம் தேதி காலை சிறப்பு திருமஞ்சனமும், மாலை 4 மணி அளவில் திருக்கல்யாண மகோத்சவமும் நடைபெறுகின்றது. 
    தொடர்புக்கு: ஸ்ரீராம கைங்கர்ய சபா: 90034 60060.
    *******************
    ராம கல்யாண மகோத்சவம்
    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்காவில் உள்ள களம்பூர் கிராமத்தில் 109 -ஆம் ஆண்டு ஸ்ரீராமநவமி ஜனனோத்ஸவ ஸ்ரீசீதாராம கல்யாண மகோத்சவம் மே 12 -ஆம் தேதி, பஜனை பத்ததியாக நடைபெறுகின்றது. இதனையொட்டி, மே 11 -ஆம் தேதி உஞ்சவிருத்தி, திவ்யநாம பஜனை நடை
    பெறும். மே 13 - ஆஞ்சநேயர் உத்ஸவத்துடன் நிறைவு பெறுகின்றது. 
    தொடர்புக்கு: 94862 35448 / 98400 58131.
    ******************
    ஸ்ரீ மஹா பெரியவா ஜெயந்தி
    சென்னை ஆதம்பாக்கம் நிலமங்கை நகர், வால்மீகி தெருவில் உள்ள ஸ்ரீ சங்கர கேந்திரத்தில் மே 19 -ஆம் தேதி ஸ்ரீ மஹா பெரியவா ஜெயந்தி சிறப்பு ஹோமங்கள், வேத பாராணங்களுடன் நடைபெறுகின்றது. தொடர்ந்து மே 20 முதல் சிறப்பு சொற்பொழிவுகளும், உபந்யாச நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. 
    தொடர்புக்கு: 99416 27330 / 99401 32402.
    ******************
    ஸ்ரீ மஹாஸ்வாமிகள் 126 -ஆவது ஜெயந்தி
    கும்பகோணம் சஹாஜி தெருவில் உள்ள ஸ்ரீ சந்த்ரசேகர பவனத்தில் ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் 126 -ஆவது ஜெயந்தி மகோத்சவம் மற்றும் பிரதிஷ்டா தின விழாவும் மே 18, 19 இரு நாட்களில் ப்ரம்மஸ்ரீ தினகர சர்மா முன்னிலையில் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு, சிறப்பு ஹோமங்கள், மகாபிஷேகம், ஸ்ரீ வித்யா நவாவரண பூஜை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், நாம சங்கீர்த்தனம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
    தொடர்புக்கு: 97880 41880 / 94436 44413.
    **********************
    பரிக்கல் பிரம்மோற்சவம்
    விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம் பரிக்கல் அருள்மிகு லஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவம் மே 15 -ஆம் தேதி திருக்கல்யாண உற்சவத்துடன் தொடங்குகிறது. முக்கிய நாள்கள் மே 16- கொடியேற்றம், மே 18 - காஞ்சி கருட சேவை, மே 24 - தீர்த்தவாரி, திருத்தேர், மே 26 - தெப்போற்சவம். இத்தலத்திற்கு செல்ல சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்டு ரோடிலிருந்து மினிபஸ், ஆட்டோ வசதி உள்ளது. 
    தொடர்புக்கு: 99430 73722 / 80121 32030.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp