குருபெயர்ச்சியின் சிறப்பம்சம்

பொதுவாக, குரு, சனி பகவான்களின் பெயர்ச்சி சஞ்சரிக்கும் காலங்களில் இவர்கள் இருவரின் பார்வை படும் ராசிகளைப் பார்க்க வேண்டும்.
குருபெயர்ச்சியின் சிறப்பம்சம்

பொதுவாக, குரு, சனி பகவான்களின் பெயர்ச்சி சஞ்சரிக்கும் காலங்களில் இவர்கள் இருவரின் பார்வை படும் ராசிகளைப் பார்க்க வேண்டும். எந்த ராசிக்கு குரு, சனி ஆகிய இரு பகவான்களின் பார்வை கிடைக்கிறதோ, அந்த ராசி சிறப்பான பலம் பெறுகிறது. இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும் இந்த வீடு லக்னத்திலிருந்தோ அல்லது ராசியிலிருந்தோ எந்த பாவமாக அமைகிறதோ அந்த வீடு, பாவம் சிறப்பாக வேலை செய்யும்.
 இந்த குருபகவானின் தனுசு ராசி பெயர்ச்சி காலத்தில் குருபகவானின் பார்வை, மேஷ ராசி, மிதுன ராசி மற்றும் சிம்ம ராசிகளின் மீது படிகிறது. சனிபகவானின் பார்வை (24.01.2020 வரை) கும்ப ராசி, மிதுன ராசி, கன்னி ராசிகளின் மீது படிகிறது. இந்த 79 நாள்களும் மிதுன ராசியின் மீது குரு, சனி பகவான்களின் பார்வை படிகிறது.
 அதுபோன்று 29.03.2020 முதல் 20.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் குரு, சனி பகவான்களின் பார்வை கடக ராசியின் மீது படிகிறது. இந்த 90 நாள்கள் கடக ராசி நல்ல இடமாக அமையப் பெற்ற லக்ன ராசிக்காரர்கள் கூடுதல் பலனைப் பெறுவார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com