நிகழ்வுகள்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகில் திருவிசலூர் கிராமத்தில் ஸ்ரீதர அய்யாவாள் கங்காவதரண மகோத்சவம் நவம்பர் 17 - இல் தொடங்குகிறது.

கங்காவதரண மகோத்சவம்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகில் திருவிசலூர் கிராமத்தில் ஸ்ரீதர அய்யாவாள் கங்காவதரண மகோத்சவம் நவம்பர் 17 - இல் தொடங்குகிறது. உற்சவ நாள்களில் பிரபல பாகவதோத்தமர்கள், சங்கீத வித்வான்கள் கலந்து கொள்ளும் பஜனை, நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள், உபன்யாசங்கள், இன்னிசை கச்சேரிகள் நடைபெறும். நவம்பர் 26 -கார்த்திகை அமாவாசை, கங்கா பூஜை, கங்காஷ்டகம், கங்கா ஸ்நானம் ஸ்ரீகுரு நாதர் ஆராதனை. நவம்பர் 27 - ஸ்ரீதர அய்யாவாள் புறப்பாடு, ஆஞ்சநேய உத்சவம். 
தொடர்புக்கு: 094440 56727.
காலாஷ்டமி பெருவிழா
தஞ்சை மாவட்டம், திருவையாற்றுக்கு கிழக்கே பைரவன் கோயிலில் ஸ்ரீகாலபைரவர் சுவாமிக்கு நவம்பர் 18 -ஆம் தேதி லட்சார்ச்சனையும், நவம்பர் 19 -ஆம் தேதி காலாஷ்டமி பெருவிழா சிறப்பு பூஜை, ஹோமங்களுடனும், வேதபாராயணங்களுடனும் நடைபெறுகின்றது. இங்கு, ஸ்ரீகாலபைரவர் காசியைப் போன்றே தென்முகமாக மயானத்தை நோக்கி வீற்றிருந்து அருளுவது சிறப்பு. 
தொடர்புக்கு: 96774 88252.
அறக்கட்டளை 9- ஆம் ஆண்டு துவக்க விழா
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருள்தரும் செல்லீஸ்வரி அம்மை உடனமர் அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோயிலில் திருஞானசம்பந்தர் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை 9- ஆம் ஆண்டு துவக்க விழா, திருப்புகழ் பண்ணிசை விழா மற்றும் கார்த்திகை மாத சிவராத்திரி அபிஷேகப் பெருவிழா, நவம்பர் 24 -ஆம் தேதி, காலை 8.00 மணி அளவில் தொடங்கி நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 99420 11914 / 99428 55343.
மகாகும்பாபிஷேகம்
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகரம், வி.கோட்டா ரோடில் அருள்மிகு வேதவல்லி உடனுறை வேம்புலீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் அருள்மிகு விநாயகர், வேம்புலீஸ்வரர், வேதவல்லி அம்மன், முருகர்- வள்ளி, தெய்வானை, பைரவர், நவக்கிரக மூர்த்திகள், சனீஸ்வரர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக பெருவிழா, நவம்பர் 18 -ஆம் தேதி, காலை 9.00 முதல் 10.30 மணி வரை நடைபெறுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com