நிகழ்வுகள்

மகான் அப்பய்ய தீக்ஷதர் ஜயந்தி மகோத்சவத்தை முன்னிட்டு அக்டோபர் 14 -ஆம் தேதி திங்கட்கிழமையன்று (1) அவரது அவதார ஸ்தலமான அடையபலம் கிராமத்தில் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷதர் ப்ரைவேட் டிரஸ்ட்

* ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷதர் ஜயந்தி
 மகான் அப்பய்ய தீக்ஷதர் ஜயந்தி மகோத்சவத்தை முன்னிட்டு அக்டோபர் 14 -ஆம் தேதி திங்கட்கிழமையன்று (1) அவரது அவதார ஸ்தலமான அடையபலம் கிராமத்தில் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷதர் ப்ரைவேட் டிரஸ்ட் சார்பில் ஏகாதச ருத்ர புரஸ்ஸரம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வித்வத்ஸதஸ் போன்ற வைபவங்களுடனும் (2) சென்னையில் அப்பய்ய தீக்ஷதர் பவுண்டேஷன் சார்பில் ஆர்.ஏ.புரம் கற்பகம் அவன்யூவில் ஓர் அன்பர் கிரகத்தில் ஸ்ரீருத்ர ஏகாதஷ விசேஷ அபிஷேகம், வúஸாத்தாரா, பூஜைகளுடன் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 97910 19450/ 95000 43938.
* ஸ்ரீருத்ர பசுபதி நாயனார் குருபூஜை
 நாயன்மார்கள் அறுபத்து மூவரில் "ஸ்ரீ ருத்ர பசுபதி' என்பவரும் ஒருவர். இவர் வேதத்திலுள்ள "ஸ்ரீருத்ரம்' என்னும் பகுதியை குளிர்ந்த பொய்கையில் கழுத்தளவு நீரில் நின்றபடி தினசரி ஓதி ஓதியே சிவபெருமானின் திருவடிகளை அடைந்தவர். இவரது திருநட்சத்திரம் புரட்டாசி அசுவினியாகும். அவதார ஸ்தலம் மாயவரம் - பேரளம் மார்க்கத்தில் கொல்லுமாங்குடிக்கு கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ள திருத்தலையூர் கிராமம். அக்டோபர் 15 -ஆம் தேதியன்று காலை 11 மணி அளவில் வேதம் ஓதும் அந்தணர்கள் திருத்தலையூரில் சிவன் கோயில் குளத்தில் நின்று ஸ்ரீ ருத்ரபாராயணம் செய்கின்றார்கள்.
 தொடர்ந்து சுவாமி, அம்மன், நாயனார் கற்திருமேனிக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. மாலை மயிலாடுதுறை சிவனடியார் திருக்கூட்டத்தினர் பங்கேற்று, நாயனார் படத்துடன் திருமுறை திருவீதி உலாவினையும் சமயச்சொற்பொழிவு, திருத்தொண்டர் புராணம் பாடியபடி வழிபாடு, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். சிவனடியார்களும், பக்தர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய குருபூஜை ஆகும்.
 தொடர்புக்கு: 097900 23110.
* புரட்டாசி சனிக்கிழமை உத்ஸவம்
 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில் அக்டோபர் 12 -ஆம் தேதி, புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு திருமஞ்சனம், அபிஷேகம், திருக்கல்யாணம், கருடசேவை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 - எஸ்.வெங்கட்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com