பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

சொற்களின் கூட்டம் ஒரு பெரிய காடு போன்றது. அது மனதை மயக்கிவிடும். ஆகையால் ஆத்மஞானம் பெற விரும்புபவர்கள் ஆத்மாவைப் பற்றிய உண்மை ஒன்றையே தன் முயற்சியால் அறிய வேண்டும். 
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

• சொற்களின் கூட்டம் ஒரு பெரிய காடு போன்றது. அது மனதை மயக்கிவிடும். ஆகையால் ஆத்மஞானம் பெற விரும்புபவர்கள் ஆத்மாவைப் பற்றிய உண்மை ஒன்றையே தன் முயற்சியால் அறிய வேண்டும். 
- ஆதிசங்கரர்
• பகவானின் கிருபையால்தான் சாது சங்கத்தை அடைய முடியும். 
- நாரதபக்திசூத்திரம்
• அழகிய உருவத்தால் பயனில்லை, குலத்தாலும் சீலத்தாலும் பயனில்லை, கல்வியாலும் முயற்சியுடன் செய்த சேவையாலும் பயனில்லை, முன்செய்த தவத்தால் சேமித்த புண்ணியங்களே உரிய காலத்தில் மரங்கள் பழங்களைத் தருவது போன்று பயன்களை அளிக்கின்றன. 
- பர்துருஹரியின் நீதி சதகம்
• இறைவன் திருவடிகளில் மனிதன் முழுமையாகச் சரணடையும்போது, இறைவன் அவனுக்கு எல்லாவற்றையும் தந்து அருள் புரிகிறார். இறைவனிடம் சரணடைந்தவன்தான் காப்பாற்றப்படுவான். 
- ஸ்ரீ சாரதாதேவியார் 
• வயோதிகர்கள், நோயாளிகள், பாரம் சுமப்பவர்கள், பெண்கள், துறவிகள், வேதம் படித்த பிரம்மச்சாரிகள், நாட்டை ஆள்பவர்கள் ஆகியவர்களுக்கு வழிவிட்டு செயல்பட வேண்டும். 
- மனுஸ்மிருதி 
• நாம் நாள்தோறும் கண்டு அனுபவிக்கும் இந்த உலகம் உண்மைபோல் தோன்றுகிறது. என்றாலும் ஒரு காலத்தில் அது பொய்த்துவிடுகிறது. அதனால் இந்த உலகம் கனவுலகம் போன்றதாகும். 
- ஆதிசங்கரர்
• எந்தத் துறவி புத்தியால் வாக்கையும் மனதையும் அடக்கவில்லையோ, அவனுடைய விரதமும் தவமும் ஞானமும் வேகாத மண்குடத்தில் வைக்கப்பட்ட நீர் போன்று ஒழுகி வீணாகிவிடும்.
- உத்தவ கீதை
• எங்கும் எல்லாவற்றிலும் எப்பொழுதும் ஆத்மா விளங்குகிறது. ஆதலால் ஆத்மா, கேவலம் புத்தியின் பிரமாணத்துக்குள் அடங்கியது அல்ல. ஆகவே ஸ்தூல கண்களால் அதைப் பார்க்க முடியாது.
- திரிபுர ரகஸ்யம்
• ஒருவனுக்கு இறைவனின் திருவருள் நேரிடையாக கிடைக்கும்போதுதான் சத்குருவையும், உயர்ந்த சாஸ்திர ஞானத்தையும் பெறுகிறான்.
- வசிஷ்டர் (யோகவாஷிட்ட சாரம்)
• உங்கள் கடமைகளை நீங்கள் செய்யுங்கள். இறைவன் நாமத்தை ஜபம் செய்யும்போதே, காற்று அடிக்காதபடி தடுக்கப்பட்டிருக்கும் ஓரிடத்தில் உள்ள விளக்கின் சுடரைப்போல், மனம் தானாகவே ஒருமுகப்படும். காற்றுதான் விளக்கின் சுடரை ஆடச் செய்கிறது. அதுபோல், நம்மிடம் உள்ள ஆசைகள்தான் நமது மனதை அமைதியற்றதாக்குகின்றன. 
- ஸ்ரீ சாரதாதேவியார் 
• அதிர்ஷ்டம் வந்து சேர்ந்தால் பிரமாதமாக மகிழ்ந்து போகாதே. அதிர்ஷ்டம் போய்விட்டால் மனவருத்தம் கொள்ளாதே. எப்போதும் மனதைச் சமநிலையில் வைத்திரு. ராமனாகிய நான் எல்லா உயிர்களுக்கும் பிராணனாக விளங்குகிறேன். என்னிடமே உன் மனம் நிலைத்திருக்கட்டும். 
- ஸ்ரீ ராமபிரான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com