நிகழ்வுகள்

சென்னை காவடிச்சிந்து அறக்கட்டளை வழங்கும் 11 -ஆம் ஆண்டு காவடிச்சிந்து இசை விழா, செப்டம்பர் 15 -ஆம் தேதி அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ராணி சீதைமன்றத்தில்

• காவடிச்சிந்து இசை விழா 
சென்னை காவடிச்சிந்து அறக்கட்டளை வழங்கும் 11 -ஆம் ஆண்டு காவடிச்சிந்து இசை விழா, செப்டம்பர் 15 -ஆம் தேதி அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ராணி சீதைமன்றத்தில் இயல், இசை, நாட்டிய வைபவங்கள், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகின்றது. திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் விழாவில் கலந்து கொண்டு அருளாசி வழங்குகின்றார். 
தொடர்புக்கு: 96770 77329 / 044-2573 4330. 
• புரட்டாசி பெருந்திருவிழா
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை, அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா, 26.9.2019 -ஆம் தேதி தொடங்கி, 20.10.2019 -ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. பிரம்மோற்சவ நாள்களில் தினந்தோறும் காலை பல்லாக்கு உற்சவங்களும்; மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளும் உற்சவங்களும் நடைபெறும். 
தொடர்புக்கு: 04324 - 257531.
• மண்டலாபிஷேகம்
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், அகஸ்தியன்பள்ளி, இராஜாளிக்காடு, அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலைச் சார்ந்த அருள்மிகு அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் இவ்வைபவங்களில் பங்கு கொண்டு இறையருள் பெறலாம்.
தொடர்புக்கு: 94422 83596.
• லகுசம்ப்ரோக்ஷணம்
திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகில் உபயவேதாந்தபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜப்பெருமாள் ஆலயத்தில், தனிசந்நிதியில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாஸப்பெருமாள் பிரதிஷ்டாவைபவத்தை முன்னிட்டு லகுசம்ப்ரோக்ஷணம் செப்டம்பர் 16 - ஆம் தேதி நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94877 64156 / 97910 89064.
• பவித்ரோத்ஸவம்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் உள்ள அன்னதானபுரம் (எ) சோத்தமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் திருக்கோயிலில் திருபவித்ர உற்சவம் செப்டம்பர் 15 தொடங்கி 18 வரை நடைபெறுகின்றது. இதனையொட்டி ஹோமங்கள், வேத, திவ்ய பிரபந்த பாராயணங்கள், தீர்த்தவாரி, நவ கலச திருமஞ்சனம், திருப்பாவாடை (தளிகை அமுது செய்தல்) விக்ஞாபனம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பாபநாசத்திலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம். 
தொடர்புக்கு: 094433 81128.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com