புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 25

பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. மார்த்தா இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 25

பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. மார்த்தா இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்' என்றார்.
 இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்' என்றார். மார்த்தா அவரிடம், "இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்' என்றார். இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?' என்று கேட்டார். மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்' என்றார். இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்' என்றார்.
 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்ட இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள்?' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்' என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. "கல்லை அகற்றி விடுங்கள்' என்றார் இயேசு. இயேசு உரத்த குரலில், "லாசரே, வெளியே வா' என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். (மாற்கு 11:1-2; லூக்கா 19:28-29).
 இச்சம்பவம் நடைபெற்றதற்கு சாட்சியாக லாசரு கல்லறை இப்போதும் உள்ளது. அதேபோல மார்த்தாள், மரியாள், லாசரு வாழ்ந்த வீடு அந்த கல்லறையின் அருகே சிதிலமடைந்து காணப்படுகிறது. லாசருவின் கல்லறை குகை போன்று உள்ளது. அதற்கு 45 டிகிரி கோணத்தில் படிகட்டுகள் வழியாக நடந்து செல்ல வேண்டும்.
 "இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்' என்றார். "
 தொழுநோயாளியை குணப்படுத்திய இடம்:
 இவற்றைச் சொன்ன பின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்த போது இரு சீடர்களை அனுப்பினார் (மத்தேயு 21:17; மாற்கு 11:11-12). பின்பு இயேசு அவர்களை விட்டு அகன்று நகரத்திற்கு வெளியே உள்ள பெத்தானியாவுக்குச் சென்று அன்றிரவு அங்கே தங்கினார் (மத்தேயு 21:17).
 இயேசு எருசலேமுக்குள் சென்று கோயிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று.' (மாற்கு 11:11-12).
 மத்தேயு 26:6-13
 இயேசு பெத்தானியாவுக்குச் சென்றபோது தொழுநோயாளர் சீமோன் என்பவரின் வீட்டில் உணவு அருந்திய வேளையில் ஒரு பெண் அவரது காலடியை நறுமணத் தைலத்தால் பூசினார். இந்நிகழ்ச்சி மாற்கு 14:3-9 பகுதியிலும், யோவான் 12:1-8 பகுதியிலும் மேலதிகமாகக் காணப்படுகின்றது.
 பின்பு, இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோயிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள் (யோவான் 1:28).
 விவிலியத்தில் மிக முக்கிய சம்பவங்கள் நடைபெற்ற இந்த புனித நகரை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான புனித பயணிகள் வருகின்றனர். லாசரு கல்லறை இருக்கும் இடம், மார்த்தாள், மரியாள் வீடு இப்போதும் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் புனித பயணிகள் செல்வதற்கு எந்த தடையும் இல்லை.
 - ஜெபலின் ஜான்
 (தொடரும்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com