பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

எந்தெந்தப் பொருட்கள் என் மகிமையை விளக்குவதாகவும், ஐஸ்வரியம் பொருந்தியதாகவும், உயர்ந்த சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றனவோ, அவை என் சக்தியின் அம்சத்தில் தோன்றியவை என்று அறிந்துகொள்.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

• எந்தெந்தப் பொருட்கள் என் மகிமையை விளக்குவதாகவும், ஐஸ்வரியம் பொருந்தியதாகவும், உயர்ந்த சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றனவோ, அவை என் சக்தியின் அம்சத்தில் தோன்றியவை என்று அறிந்துகொள்.
- ஸ்ரீ கிருஷ்ணர்
• எவனுக்குப் பிரகஸ்பதி வழிகாட்டும் குருவோ, ஆயுதம் வஜ்ரமோ, தேவர்கள் சேனையோ, சுவர்க்கம் கோட்டையோ, அருள்புரிபவர் ஹரியோ, ஐராவதம் வாகனமோ, இப்படி ஐஸ்வரிய பலம் மிக்கவனாகவும் எதிரிகளின் பலத்தைச் சிதற அடிப்பவனாகவும் இருந்தும் போரில் பகைவர்களால் இந்திரன் வெல்லப்படுகிறான். ஆகையால், விதியைத்தான் சரணடைய வேண்டும்; நிச்சயமாக ஆண்மையால் மட்டும் ஆவதொன்றில்லை. 
- பர்துருஹரியின் நீதி சதகம்
• குருடன், வழியில் இருக்கும் வைக்கோல் துரும்பை மிதித்தாலும் பீதி கொள்கிறான். அதுபோல், மாயையால் கட்டுண்டவர்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கண்டு பயமடைகிறார்கள். 
- ஞானதரிசிவினி
• நோய்கள் வரும்போது தெய்வங்களிடம் வேண்டிக்கொள்வதால், பெரிய ஆபத்துகள் விலகுகின்றன. உன்னை இறைவன் ஒருவனே பாதுகாத்துக் கொண்டிருக்கிறான் இதை நீ எப்போதும் நினைவில் வைத்துக்கொள். நீ இதை மறந்தால் எல்லாம் தலைகீழாகிவிடும். 
- ஸ்ரீ சாரதாதேவியார்
• இந்த உலகம் தீயவருக்கு தீய நரகமாகத் தெரிகிறது; நல்லவருக்குச் சுவர்க்கமாகத் தெரிகிறது; அருளாளர்களுக்கு அருள்வடிவமாகத் தெரிகிறது; பகையுணர்ச்சி உடையவர்களுக்கு வெறுப்புமயமாகத் தெரிகிறது; சண்டை சச்சரவு செய்பவர்களுக்குப் போர்க்களமாகத் தெரிகிறது; மனதில் அமைதியைப் பெற்ற தூயமனிதனுக்கு எல்லாமே இறைவன் வடிவமாகத் தெரிகிறது.
- சுவாமி விவேகானந்தர்
• மிகவும் சிறிய அளவிலுள்ள ஓர் எண்ண அலை கூட மனிதனைத் துன்பத்தில் மூழ்கடிக்கிறது. ஆனால் அவனுடைய எண்ண அலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டால், அளவில்லாத மகிழ்ச்சியையும் அழியாத பேரின்பத்தையும் அவன் அனுபவிக்கிறான். 
- வசிஷ்டர் (யோகவாஷிட்ட சாரம்)
• கல்லாகக் கிடந்தபோதும்கூட, கெளதம மகரிஷியின் பத்தினியான அகலிகை, ஸ்ரீ ராமநாமத்தைச் சொல்வதற்குத் தவறவில்லை! அவள் ஸ்ரீ ராமநாமத்தைத் தவிர, வேறொன்றையும் நினைக்கவுமில்லை!!
• அந்த பக்தியை ஏற்று, அவளுக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து அவளை விடுவிக்க ஸ்ரீ ராமபிரானே அவளைத் தேடி வந்தான். அவனது திருவடி ஸ்பரிசம் பட்டதும், முன்னைவிட அதிக ஒளியுடன் அகலிகை எழுந்தாள்.
• ஆதலால், வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள் நேரிடினும், ஸ்ரீ ராமநாமத்தைப் பற்றிக்கொள்ளுங்கள். ஸ்ரீ ராமநாமம் எவரையும் கைவிட்டதில்லை.
- சமர்த்த ராமதாசர் (சத்ரபதி சிவாஜியின் குரு)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com