கச்சிமூதூர் வழங்கும் அர்ச்சகர்களுக்கான நிதியுதவி!

காஞ்சி ஸ்ரீ மகாசுவாமிகளின் அருளாசியுடன் 1986- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, "கச்சிமூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை!' அர்ச்சகர்களின் நலனுக்கான பல்வேறு சேவைகளைச் செய்து வரும்
கச்சிமூதூர் வழங்கும் அர்ச்சகர்களுக்கான நிதியுதவி!

காஞ்சி ஸ்ரீ மகாசுவாமிகளின் அருளாசியுடன் 1986- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, "கச்சிமூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை!' அர்ச்சகர்களின் நலனுக்கான பல்வேறு சேவைகளைச் செய்து வரும் இந்த அறக்கட்டளை, கிராமக் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
 புராதன கிராமக் கோயில்களில் பணியாற்றும் பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள், பூசாரிகள் ஒவ்வொரு மாதமும் இந்த நிதியுதவியைப் பெறலாம். தற்போது அர்ச்சகர்கள் இந்த உதவித்தொகையினைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த உதவித்தொகையை பெறும் அர்ச்சகர்களுக்கான சில நிபந்தனைகளையும் கடைபிடிக்க வேண்டுமென காஞ்சி மகாசுவாமிகள் அறிவுறுத்தியிருந்தார்.
 அர்ச்சகர்கள் பணியாற்றும் கோயில்கள் 1940- ஆம் ஆண்டுக்கு முன்னர் முறையான கருவறை மற்றும் நிரந்தர கட்டமைப்போடு நிறுவப்பட்டிருக்க வேண்டும். அர்ச்சகர்கள் அக்கோயில்களில் தினமும் 2 முறை பூஜை செய்ய வேண்டும். அவர்களது மாத வருமானம் மொத்தம் 7500 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என்றும், கோயில் பூஜைகளை ஒருவர் மட்டுமே செய்து வருவதாக இருக்க வேண்டும் என்றும், அதோடு 2 அல்லது அதற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள் முறை வைத்து பூஜை செய்திடல் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
 இத்தகைய நிபந்தனைகள் முக்கியமானதாக கருதப்பட்டு கடைபிடிக்கப்படுவதுடன் ஆண்டுதோறும் வாய்மொழித்தேர்வும் நடத்தப்பட்டு, அதன்பின்னரே இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு தகுதியான அர்ச்சகர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
 காஞ்சி மகாசுவாமிகளால் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அர்ச்சகர்களால் வாய்மொழித் தேர்வின்போது ஓதப்பட வேண்டும். குறிப்பாக, அச்சிடப்பட்ட பாடதிட்டங்கள் வாய்மொழித்தேர்வுக்கு உதவியாக இருக்கும் வகையில் அடிப்படை ஸ்லோகங்கள் (சம்ஸ்கிருதம் அல்லது தமிழ்) அர்ச்சகர்களுக்கு முன்னதாகவே அனுப்படுவதால் அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வது எளிதாகவே இருக்கும்.
 திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் 17.02.2020 - ஆம் தேதி, சிவாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு வாய்மொழித்தேர்வு நடைபெறுகின்றது. அவ்வாறே, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பட்டாச்சாரியார்களுக்கு (வைகானசம், பாஞ்சராத்ரம்) வாய்மொழித்தேர்வு நடைபெறும்.
 இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அர்ச்சகர்கள்(சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 16- ஆம் தேதிக்குள், கச்சிமூதூர் அர்ச்சகர்கள் நலஅறக்கட்டளை, புதிய எண்: 16, இரண்டாவது பிரதான சாலை, கோட்டூர் கார்டன்ஸ், சென்னை- 85 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படியாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com