மண்ணில் தோன்றிய மாலோலன்!

நரசிம்மர் தூணில் இருந்து தோன்றியதாகத்தான் சரித்திரம் சொல்கின்றது. ஆனால் இப்போது மண்ணில் இருந்து தோன்றினார் என்றால்
மண்ணில் தோன்றிய மாலோலன்!

நரசிம்மர் தூணில் இருந்து தோன்றியதாகத்தான் சரித்திரம் சொல்கின்றது. ஆனால் இப்போது மண்ணில் இருந்து தோன்றினார் என்றால் ... ஆம், ராமநாதபுரம் மாவட்டம், ஆனந்தூர் வட்டம், ஆயிங்குடி கிராமத்தில் 1911-12-ஆம் ஆண்டுகளில் ஊருக்கு வடக்கு புறமாக உள்ள கண்மாயை ஆழப்படுத்தும் போது, கண்மாய் மண்ணில் தோன்றியவர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர். ஆயர்கள் என்றழைக்கப்படும் யாதவர்கள் நிறைய வாழ்ந்ததால் ஆயிங்குடி என்று பெயர். இந்த நரசிம்ம சுவாமிக்கு திருத்தேர்வளை ஜமீன்தார் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அவர்களின் ஏற்பாட்டில் ஒரு சிறிய ஆலயம் உருவாக்கப் பெற்று பூஜா கைங்கர்யங்கள் பரம்பரையாகத் தொடரப்பட்டது. பின்னர் கிராமப் பொதுமக்களின் பேராதரவோடு 1956 -இல் சற்று பெரிய ஆலயம் கட்டப்பட்டது.
காலப்போக்கில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் திருவுருவத்தில் சில பின்னங்கள் ஏற்படவே, 2006 -இல் புதிய சிலையினைச் செய்து ஆலயத்தைப் புதுப்பித்து, ஸ்ரீ விஸ்வúக்ஷனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்து சம்ப்ரோஷண வைபவம் நடந்தேறியது. ஸ்ரீ வெங்கடேச ஐயங்கார் என்பவர் ஆலய உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்து பூஜையினைத் தொடர்ந்து செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு இனிய சொற்களைக் கூறியும், ஜோதிடத்தின் மூலம் நல்வாக்கு அருளியும் வருகின்றார்கள்.
அதிசயமாக இன்றும் கருடாழ்வார் சிலை மீது கருடனோ அன்றி ஏதேனும் ஒரு பறவையோ தினசரி வந்து அமர்வதை இன்றும் கிராம மக்கள் தரிசனம் செய்து அருள்பெறுகின்றார்கள்.
ஆண்டுதோறும் வைகாசி மாதம் கடைசி சனிக்கிழமை வருஷாபிஷேகம் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றது. புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமைகளிலும் (இவ்வாண்டு செப்டம்பர் 21, 28 மற்றும் அக்டோபர் 5, 12) விசேஷமாக வேத, திவ்ய பிரபந்த பாராயணம், திருமஞ்சனம், சுதர்ஸன ஹோமம் ஆகிய வைபவங்களுடன் வெகு சிறப்பாக நடைபெறும். சுற்றுப்புறத்தில் 40, 50 கி. மீ. தொலைவுக்கு வேறு பெருமாள் ஆலயங்கள் ஏதும் இல்லாததால் கிராமத்தின் பொது மக்கள் அனைவரும் பெருந்திரளாக வருகை தந்து தரிசனம் செய்து பலன் பெற்று வருகின்றனர். இதைத்தவிர, மாதந்தோறும் சுவாதி நட்சத்திர நன்னாளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், ஹோமங்கள் நடைபெறுகின்றன. நாளை என்பதே நரசிம்மனிடம் இல்லை என்பார்கள். அப்படி ஆய்ங்குடி ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபாடு செய்து பலன் பெறுவோர் பெருகி வருகின்றார்கள்.
தற்போது கண்ணன் ஐயங்கார் என்பவர் பரம்பரை அறங்காவலராகவும், அர்ச்சகராகவும் இருந்து ஆலயத்தைப் பரிபாலனம் செய்து வருகின்றார்கள். 
தொடர்புக்கு: 99422 98227 / 94437 39160.
- இலக்கியமேகம் ஸ்ரீநிவாஸன்

உங்கள் பகுதியிலுள்ள கோயிலில் திருப்பணி நடைபெறுகிறதா?"வெள்ளிமணி' பகுதிக்குத் தகவல் அளிக்கலாம்.
முகவரி: தினமணி வெள்ளிமணி, எக்ஸ்பிரஸ் கார்டன், 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 58.
vellimani@dinamani.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com