தண்ணீர்  திராட்சை ரசமாய் மாறியது!

இயேசுவும் அவருடைய சீடர்களும் கானா என்னும் ஊரில் நடைபெற்ற திருமணத்திற்கு அழைக்கப்பட்டார்கள். இயேசு நசரேய விரதம் கடைப்பிடிக்கும் சந்நியாசியாக இருந்தாலும் தம் சீடர்களுடன் திருமணத்திற்கு சென்றார்.
தண்ணீர்  திராட்சை ரசமாய் மாறியது!

இயேசுவும் அவருடைய சீடர்களும் கானா என்னும் ஊரில் நடைபெற்ற திருமணத்திற்கு அழைக்கப்பட்டார்கள். இயேசு நசரேய விரதம் கடைப்பிடிக்கும் சந்நியாசியாக இருந்தாலும் தம் சீடர்களுடன் திருமணத்திற்கு சென்றார். இயேசுவின் தாயும் அந்தத் திருமணத்திற்கு வந்திருந்தார். திருமணம் யூத முறைப்படி சிறப்பாக நடைபெற்றது.
திருமண விருந்து மிகச் சிறப்பாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது.  யூத திருமணங்கள் பொதுவாக மாப்பிள்ளை வீட்டில்தான் நடைபெறும்.  தங்கள் குடும்பப் பெருமை குறையாமல் உபசரிப்பு அமையும். விருந்தினரை வெகு சிறப்பாக உபசரிப்பார்கள். 
முதலில் திராட்சை ரசம் பரிமாறுதலுடன் விருந்து தொடங்கியது. உயர்தரமான திராட்சைப் பழங்கள் கொண்டு வரப்பட்டு, சாறு பிழிந்து இனிப்பும் வாசனைப் பொருள்களும் கலந்து, வந்த விருந்தினர்கள் ஒருவர் விடாமல் அனைவருக்கும் பருகக் கொடுப்பது வழக்கம்.  
அப்பொழுது திராட்சை ரசம் காலியாயிற்று. இன்னும் நிறைய பேருக்கு கொடுக்கப்பட வேண்டும். திராட்சை ரசம் வாங்கி வரவோ, தயாரிக்க முடியாத நிலையோ ஏற்பட்டால் உபசரிப்பில் குறையாகக் கருதப்படும். 
அன்னை மரியாள் இயேசுவிடம் வந்து ""விருந்தினர்களுக்கு திராட்சை ரசம் இல்லை'' என்றார். இயேசுவோ ""அம்மா! இன்னும் என் வேலை வரவில்லை'' என்றார். (யோவான் 2: 4)
பின்பு, இயேசு வேலைக்காரரைப் பார்த்து காலியான ரச ஜாடிகளில் தண்ணீர் நிரப்பும் படி சொன்னார். அங்கே ஆறு பெரிய ஜாடிகள் இருந்தன. ஒவ்வொன்றும் மூன்று குடம் தண்ணீர் பிடிக்கும். 
தண்ணீர் நிரப்பியவுடன், இயேசு ஜாடியில் உள்ளவற்றை பந்தி விசாரிப்புக்காரனிடம் கொண்டு போய்க் கொடுக்கும் படி சொன்னார். கொண்டு போய்க் கொடுத்தார்கள்.  பந்தி விசாரிப்புக்காரன் ரசத்தை ருசி பார்த்தான்.  என்ன இனிய சுவை? வாசனை மிகுந்த உயர் தரமான திராட்சை  ரசமாய் இருந்தது. பந்தி விசாரிப்புக்காரனை மாப்பிள்ளை அழைத்து பாராட்டினான். 
இயேசு தண்ணீரை தம் தெய்வீக வல்லமையால், ருசி மிக்க, தரம் வாய்ந்த திராட்சை ரசமாய் மாற்றித் தந்தார். 
இவ்வருட வாக்கு தத்தம் வேதாகமம் கூறுகிறது:  ""நீ பயப்படாதே!  நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே! நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன். என் நிதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்''. (ஏசாயா 41 :10 ). வரும் புத்தாண்டை இயேசு ஆசீர்வதித்து எல்லா நலன்களையும் தருவாராக. என்றும் இறையருள் நம்மோடு. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com