நிகழ்வுகள்  (14/02/2020)

செங்கற்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் மேற்கில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது குளத்தூர் அருள்மிகு ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளசீஸ்வரர் ஆலயம். 1200 ஆண்டுகளுக்கு
நிகழ்வுகள்  (14/02/2020)

மகாசிவராத்திரி மகோத்சவம் - ஸ்ரீதுளசீஸ்வரர்
 செங்கற்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் மேற்கில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது குளத்தூர் அருள்மிகு ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளசீஸ்வரர் ஆலயம். 1200 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. பல்லவ, விக்ரம சோழ மன்னர்கள் ஆதரவு பெற்றது.
 தல வரலாற்றின்படி, தொண்டை மண்டலத்தில் அகத்தியர் பூசித்த 108 சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று எனப்படுகின்றது. இக்கோயிலுக்கு வடபுறம் அகத்தியர் ஒரு தீர்த்ததை உண்டாக்கி அபிஷேகம் செய்து துளசீஸ்வரருக்கு கொன்றைமாலை சார்த்தி, துளசியினால் ஆயிரத்தெட்டு நாமங்களினால் சிவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிட்டாராம். அவரது பூஜைக்கு உகந்து இறைவன் ஒரு புரட்டாசி மாதம் உமாமகேச்வர விரத நன்னாளில் சிவனும் சக்தியும் இணைந்த திருக்கோலமான - அர்த்தநாரீசுர வடிவில் காட்சியளித்தார். எனவே இத்தல இறைவன் அர்த்தநாரீசுவர லிங்கத்திருமேனியாக பாவிக்கப்படுகின்றது. சுவாமிக்கு துளசீச்வரர் என்ற அற்புத திருநாமம். இவரை துளசி மாலை சாற்றி வழிபட, அதன் பலன்கள் பல உண்டு என பக்தர்களிடையே அசாத்திய நம்பிக்கை நிலவுகிறது.
 எதிர்வரும் சிவராத்திரி நன்னாளன்று (பிப்ரவரி 21, வெள்ளிக்கிழமை) மகாசிவராத்திரியை முன்னிட்டு இரவு விசேஷ அபிஷேக ஆராதனைகளுடன் நான்கு காலபூஜைகள் நடைபெறுகின்றன. முதல் காலம் அம்பாள் வழிபாடு, இரண்டாவது: விநாகர், முருகன் வழிபாடு மூன்றாவது: மகா விஷ்ணு வழிபாடு. நான்காவது: பிரம்மா, சகல தேவர்கள் வழிபாடு.
 தொடர்புக்கு: 94440 22133 / 99402 06679.
 ஸ்ரீதர அய்யாவாள் மடம்
 கும்பகோணம் அருகில் திருவிசலூர் ஸ்ரீஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் மகாசிவராத்திரி மகோத்சவம் பிப்ரவரி 19, 20, 21 தேதிகளில் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு, தேவார இன்னிசை, சிவ திவ்ய நாம பஜனைகள், மகன்யாச ஏகாதஸ ருத்ராபிஷேகம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்படாகியுள்ளது.
 தொடர்பிற்கு: ஸ்ரீதர அய்யாவாள் சேரிடபிள் டிரஸ்ட் செல்: 9444056727.
 மண்டலாபிஷேக பூர்த்தி
 ஆழ்வார்திருநகரி, குண்டு தெரு, அருள்மிகு ஈசான உச்சினி மாகாளி அம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம், பிப்ரவரி 12- இல் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தினமும் அம்பாளுக்கு மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றது. 48 -ஆவது நாளான பங்குனி 18- ஆம் நாள் (31.03.2020) செவ்வாய்க்கிழமையன்று மண்டாலாபிஷேக பூர்த்தி வைபவங்கள் சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் இவ்வைபவங்களில் பங்கேற்று இறையருள் பெறலாம்.
 தொடர்புக்கு: 97904 25159.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com