புன்னகை சாயிபாபா!

சென்னை பல்லாவரத்திற்கு அடுத்துள்ள பம்மலில் எண். 32 , வேதகிரி தெருவில் அமைந்துள்ளது புன்னகை சாயிபாபா ஆலயம்! இங்கு, சாயிபாபா நம்மை பார்த்து அன்புடன் புன்னகைத்த படியே அருள்பாலிக்கிறார்.
புன்னகை சாயிபாபா!

சென்னை பல்லாவரத்திற்கு அடுத்துள்ள பம்மலில் எண். 32 , வேதகிரி தெருவில் அமைந்துள்ளது புன்னகை சாயிபாபா ஆலயம்! இங்கு, சாயிபாபா நம்மை பார்த்து அன்புடன் புன்னகைத்த படியே அருள்பாலிக்கிறார்.
 ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு ஒவ்வொரு வியாழன் அன்றும் வந்து சாயிபாபாவிடம் தங்களுடைய கோரிக்கைகளை வைத்து வேண்டி செல்கின்றார்கள். அவர்கள் வைக்கும் வேண்டுதலும் உடனுக்குடனேயே நிறைவேற்றி தருகிறார் நமது புன்னகை சாயிபாபா. தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவரையும் தன்னுடைய பிள்ளைகளாக பாவித்து காத்து ரட்சிப்பவர் தான் புன்னகை சாயிபாபா!
 புன்னகை சாயிபாபா ஆலயத்தில் புன்முறுவல் புன்னகையுடன் வீற்றிருக்கும் இந்த சாயிபாபாவை தரிசனம் செய்தாலே போதும், நம்முடைய ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிகழும் அனைத்து விதமான துன்பங்களும் மறையும்; மலர்ந்து புன்னகை மட்டுமே நம் முகத்தில் ததும்பும்!.
 புன்னகை சாயிபாபா ஆலயத்தின் சிறப்பு
 இந்த ஆலயத்தில் சாயிபாபாவின் ஆரத்திக்கு முன்பு உலக மக்களின் நன்மைக்காக இங்கே கூட்டுப்பிரார்த்தனை நடை பெறுகிறது. அந்த கூட்டுப்பிரார்த்தனையில் நாம் யார் வேண்டுமானாலும் நம் உறவினர் பெயரையோ அல்லது நண்பர்கள் பெயரையோ, யாருக்கு உடல் நிலை சரி இல்லையோ அவர்களின் பெயர், ஊர், என்ன வேண்டுதல் என்று எழுதி ஆலய நிர்வாகியிடம் கொடுத்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொன்னால் போதும், அவர் எல்லோர் நலனுக்காகவும் இந்த கூட்டு பிரார்த்தனையின் பொழுது நமக்கான வேண்டுதலை வைக்கிறார். கூட்டாக எல்லோரும் வேண்டும் வேண்டுதலானது அப்படியே பலிக்கிறது. இதுவே இந்த ஆலயத்தின் சிறப்பு!
 மேலும், இந்த ஆலயத்தில் சீரடி சாயிபாபா உடன் ஸ்ரீதேவி கருமாரி அம்மன், ஆஞ்சநேயர் மற்றும் சனீஸ்வரர் ஆகிய தெய்வங்களும் அமைந்துள்ளன.
 ஒவ்வொரு சனிக்கிழமையும் சனீஸ்வரருக்கு தங்கள் கைகளாலேயே எண்ணெய் அபிஷேகம் செய்து, சுலோகம் படித்தல் என்பது மிக சிறப்பான நிகழ்வாக நடைபெறுகின்றது. இங்கு வந்து வேண்டி கொண்டு எண்ணற்ற நன்மைகள் அடைந்த பக்தர்களே இந்த ஆலயத்தில் சேவை செய்து வருகிறார்கள்.
 இந்த ஆலயத்தில் ஷிர்டியில் உள்ளது போல எங்கும் இல்லாத பெரிய துணி, 24 மணி நேரமும் எரிந்து கொண்டு இருக்கிறது. பக்தர்களின் கைகளால் பாபாவிற்கு நிவேதனமும் செய்யப்படுவது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.
 மிக பிரமாண்டமான இந்த புன்னகை சாயிபாபா ஆலயத்தில் நான்கு கால ஆர்த்தியும், வேத பாராயணமும் மிக பிரம்மாண்டமாக நடை பெறுகிறது. சாயிபாபாவின் பல்லக்கை மனமுருக வேண்டியபடி பெண் பக்தர்கள் தூக்கி தூணியை மூன்று முறை சுற்றி வருகிறார்கள். பின்னர், யதாஸ்தானத்தில் வைக்கின்றனர். இது வேறு எங்கும் இல்லாத ஒரு புது நிகழ்ச்சி என்றே சொல்லலாம். ஆலயத்திற்கு வரும் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்படுகிறது
 ஓம் சாய் ராம்!
 - எல். மோகன் வேல்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com