குந்தி தேவியின் பாவம் நீக்கிய மாசி மகம்!

குந்தி தேவிக்கு, சூரியன் மூலமாக கர்ணன் அவதரித்தான். திருமணமாவதற்குமுன், குழந்தை பெற்றுக் கொண்ட குந்தி தேவி, கர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள்
குந்தி தேவியின் பாவம் நீக்கிய மாசி மகம்!

குந்தி தேவிக்கு, சூரியன் மூலமாக கர்ணன் அவதரித்தான். திருமணமாவதற்குமுன், குழந்தை பெற்றுக் கொண்ட குந்தி தேவி, கர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். அந்த பாவம் அவளை உறுத்திக் கொண்டிருந்தது.
 ஒருநாள், முனிவர் ஒருவரைச் சந்தித்த குந்தி தேவி, "குழந்தை கர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்ட பாவம் நீங்க, பரிகாரம் கேட்டாள். அதற்கு, முனிவர் "மாசி மகம்' அன்று ஏழு கடல்களில் நீராடினால் பாவம் விலகும்' என்றார்.
 " ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும்?' என்று மிகவும் கவலையுடன் இறைவனை வேண்டி துதித்தாள் குந்தி தேவி. அப்போது ஓர் அசரீரி கேட்டது.
 "திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது; அதனை ஏழு கடல்களாக நினைத்து நீராடு' என்றது.
 குந்தி தேவியும் அப்படியே நீராடி பாவ விமோசனம் பெற்றாள் என்கிறது புராணம். குந்தி தேவி நீராடிய தீர்த்தம் "சப்த சாகர தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.
 இத்தலம், தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், திருநல்லூரில் உள்ள அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் உள்ளது.
 மாசி மகத்தன்று இத்தீர்த்தக்குளத்தில் ஏழு கடல்கள் நீரும் பொங்கி வழியும் என்பது ஐதீகம்!
 - டி.ஆர். பரிமளரங்கன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com