நிகழ்வுகள்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, தட்டாத்திமூலை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பூர்ணா }புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர (கரும்பாயிரம் கொண்டவர்) ஆலய மகாகும்பாபிஷேகம்,

மகா கும்பாபிஷேகம்
 திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, தட்டாத்திமூலை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பூர்ணா }புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர (கரும்பாயிரம் கொண்டவர்) ஆலய மகாகும்பாபிஷேகம், 05.03.2020, காலை 8.46 - 10.28 மணிக்குள் நடைபெறுகின்றது. முன்னதாக, மார்ச் 2 முதல் ஹோமம் மற்றும் பூஜைகள் தொடங்கி நடைபெறும்.
 சம்வத்ஸ்ராபிஷேகம்
 தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர், தாலுக்கா 69-சாத்தனூர் திருமூலநாயனார் திருக்கோயிலில் கடந்த 2019- ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்வாண்டு, பிப்ரவரி 28 -ஆம் தேதி, முதலாம் ஆண்டு சம்வத்ஸராபிஷேகம் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு, சிறப்பு ஹோமம், அபிஷேகம், திருமந்திரம் முற்றோதல், உற்சவர் திருவீதி உலா ஆகியவை நடைபெறும். கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை, ஆடுதுறையிலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூலர் கோயில்.
 தெ"ôடர்புக்கு: 98409 29729/ 94444 31691.
 மகா குருபூஜை
 மகான் சித்தபுருஷர் சிவஸ்ரீ படேசாகிப் சுவாமிகளின் மகா குருபூஜை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கண்ட மங்கலம் ஒன்றியத்தில் சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள அவரது ஜீவசமாதி வளாகத்தில் மார்ச் 7 -ஆம் தேதி (மாசி ஆயில்யம்) சனிக்கிழமையன்று நடைபெறுகின்றது. மகானின் திரு உருவப்படம் திருத்தேர் வலம் வருதல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 தொடர்புக்கு: 78680 47049 / 94434 60460.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com