Enable Javscript for better performance
குருபகவான் தரும் பலன்கள்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    குருபகவான் தரும் பலன்கள்!

    By DIN  |   Published On : 03rd January 2020 11:14 AM  |   Last Updated : 03rd January 2020 11:14 AM  |  அ+அ அ-  |  

    vm3

    மூன்றில் குருபகவான் நிற்க: சகோதர சகோதரிகளிடம் அன்புள்ளவராகவும்  அவர்களை ஆதரிப்பவராகவும் உறவினர்களை போஷிப்பவராகவும் தயவு தாட்சண்யம் ஈவிரக்கம் உள்ளவராகவும் தைரியசாலியாகவும் பாக்கியவானாகவும் அரசு ஆதரவு பெற்றவராகவும் திகழ்வர்.
    மூன்றாம் வீட்டை குரு பார்த்தால்: வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். சகோதர நலம் ஓங்கும். பயணத்தின் மூலம் உற்சாகமும் ஆதாயமும் கிடைக்கும். மற்றையோருக்கு அறிவுரை கூறக்கூடிய தகுதி அமையும். நல்ல விஷயங்களைப் பேசக்கூடிய ஆற்றல் அமையும். கேள்வி, ஞானம் அதிகமாகும். மனோ பலம், சரீர பலம் இரண்டும் சீராக அமைந்திருக்கும். 
    தோள் வலிமை உண்டாகும். குரலில் கம்பீரமும் இனிமையும் கவர்ச்சியும் அமைந்திருக்கும். இசை ஞானம் உண்டாக வாய்ப்புண்டு. மனக்குழப்பம் அகலும். பெரிய சாதனைகளைச் செய்யும் பராக்கிரமம் ஏற்படும். போட்டி பந்தயங்களில் திறமையை ஏற்படுத்தி வெற்றி வாகை சூட வாய்ப்புண்டு. ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கல்வித்துறைகளில் அபிவிருத்தி ஏற்படும். குடும்ப கௌரவத்தை ஜாதகர் காப்பாற்றிவிடுவார். வாகன வசதிகளும் அமையும்.
    குருபகவானுக்குரிய நவரத்தினம் புஷ்பராகம்:  இது வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை அணிய உடல்நலம், நீண்ட ஆயுள், பெருமை, புகழ் சேரும். இது குருபகவானுக்குரிய ரத்தினமாவதால் இதனை அணிய சகல தோஷங்களும் நீங்கும். புத்திரபாக்கியம் இல்லையென்றால் புஷ்பராகம் அணிய குழந்தை பிறக்கும். முடக்கு வாதம், ஹிஸ்டீரியா, மன அதிர்ச்சி போன்ற வியாதிகள் நீங்கும். 
    3, 12, 21 -ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் புஷ்பராக ரத்தினத்தை அணியலாம். இதனை, தங்கத்தில் திங்கள் அல்லது வியாழக்கிழமைகளில் குரு ஹோரையில் குருபகவானை நினைத்து வலது கை மோதிர விரலில் அணிய வேண்டும்.
    ஆறாம் வீட்டில் குருபகவான் பலன்: ஜாதகருக்கு பங்காளிகள் அதிகம் உண்டு. நேர்முக எதிரிகள் இருக்கமாட்டார்கள். வாயு சம்பந்தமான வியாதியும், வயிறு சம்பந்தமான உபாதைகளும்  உண்டாகும். மலச்சிக்கல், அடிக்கடி மேல்மூச்சு வாங்குதல், கை கால் பிடிப்பு, ரத்த அழுத்தம், மயக்கம், நீரிழிவு, அளவுக்குமீறி பெருத்தல் ஆகியவை உண்டாகும். 
    சட்டமும் நேர்மையும் நியாயமும் நீதிமன்றமும் இவர்களுக்கு வெற்றி தரும். வேலையாட்கள் பணிந்து பண்புடன் செயலாற்றுவார்கள். சமூகத்தில் கௌரவமும் நன்மதிப்பும் உண்டாகும். அதேநேரம் புத்திர வகையில் சிறு சஞ்சலங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. 
    - கே.சி.எஸ். ஐயர்


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp