பொன்மொழிகள்!

பகவானுக்கும்,  பக்தர்களுக்கும் இடையில் வேற்றுமை இல்லை.
பொன்மொழிகள்!

பகவானுக்கும்,  பக்தர்களுக்கும் இடையில் வேற்றுமை இல்லை.
-நாரத பக்திசூத்திரம்

தாரகன் என்ற அசுரனை மாய்த்தவனே! அபஸ்மாரம், குஷ்டம், காசம், அர்சம், மேகஜ்வரம், பைத்தியம், குன்மம் முதலிய கொடிய நோய்களும், எல்லா வகையான பிசாசுகளும் உன் இலை விபூதியைப் பார்த்த மாத்திரத்திலேயே விலகி ஓடிவிடுகின்றன அல்லவா!  இந்த உன்னுடைய விபூதியின் பெருமையை நான் என்னவென்று சொல்வேன்! 
- சுப்ரமண்ய புஜங்கம் 

ஈசனே! சூரிய சந்திரர்களைப் போல,  நாங்களும் நியமத்துடன் உலகிற்கு நன்மை தரும் நன்னெறியில் முன்னேறுவதற்கு அருள் புரியுங்கள். அஹிம்சையும் தானமும் தவமும் நிறைந்த உத்தமர் உறவைத் தந்து, இந்த உலகில் நாங்கள் நேரிய தூய்மையுடன் வாழ்வதற்கு அருள் செய்யுங்கள்.

இறைவனே! சூரிய சந்திரர்களைப் போன்று, நாங்களும் நியமத்துடன் உலகிற்கு நன்மை தருகின்ற நன்னெறியில் முன்னேறுவதற்கு அருள் புரியுங்கள். அஹிம்சையும், தானமும் தவமும் நிறைந்த உத்தமர் உறவைத் தந்து, இந்த உலகில் நாங்கள் நேரிய தூயவர்களாக வாழ்வதற்கு அருள் செய்யுங்கள்.
-ரிக் வேதம் 5.5115

சகலகலாவல்லியாகிய சரஸ்வதிதேவியே! நீ எழுதுவதற்கு அரிய ஒலி வடிவமாகத் திகழும் வேதத்திலும் இருக்கிறாய்; நீ விண்ணிலும் மண்ணிலும் நீரிலும் நெருப்பிலும் இருக்கிறாய்; நீ விரைந்த காற்றிலும் அன்பர்களின் கண்களிலும் கருத்திலும் நிறைந்திருக்கிறாய்; நீ  பண்ணும் பரதமும் கல்வியும் (முத்தமிழும்) இனிமையான சொற்களையுடைய நூலும் நான் நினைக்கும்போது, என் மனதில் எளிதில் தோன்றும்படி அருள் புரிவாயாக!
 -குமரகுருபரர்

புத்திசாலியான மனிதன் தன்னுடைய துன்பங்களை வெளியே சொல்லக் கூடாது. பணத்திற்கு நாசம் ஏற்பட்டாலும், மனதிற்குத் தாங்க முடியாத துன்பம் ஏற்பட்டாலும், வீட்டிற்குள் அநியாயம் நடந்தாலும், எவனாவது ஓர் அயோக்கியனால் ஏமாற்றம் ஏற்பட்டாலும், மரியாதைக் குறைவாக எவராவது ஏசினாலும்  இவற்றை ஒருவர் யாரிடமும் சொல்லக் கூடாது.
- சாணக்கிய நீதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com