சப்த மாதர் அருள்பாலிக்கும் கோவாத்தம்மன் ஆலயம்

சப்த மாதர் அருள்பாலிக்கும் கோவாத்தம்மன் ஆலயம்

சென்னைக்கு வடக்கே 20 கி.மீ. தொலைவில் செங்குன்றம்-சோழவரத்திற்கு அருகில் உள்ளது பூதூர் கிராமம்.

சென்னைக்கு வடக்கே 20 கி.மீ. தொலைவில் செங்குன்றம்-சோழவரத்திற்கு அருகில் உள்ளது பூதூர் கிராமம். இங்கு 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விருபாக்சீஸ்வரர் விசாலாட்சி அம்பாள் எழுந்தருளியுள்ள திருக்கோயில் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோயிலின் பிரகாரத்தில் சுவர்ணாம்பிகை உடனுறை பைரவர், கணபதி, சுப்பிரமணியர் கோயில்கள் தனித்தனியாக உள்ளன. 

மேலும் இங்குள்ள ராதா கிருஷ்ணர் கோயிலும், கங்கை அம்மன் கோயிலும் இக்கிராமத்தின் தனிச்சிறப்பாகும். கிராம தேவதைகள் என்றும் கோவாத்தம்மன் கோயில் என்றும் அழைக்கப்படும் சப்தமாதர் ஆலயம் 15-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாக தொல்பொருள் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

க்கோயிலில் விநாயகர், வீரபத்திரர் இருபுறமும் இடையில் "சப்தமாதர்கள்' என்று அழைக்கப்படும் பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, இந்திராணி, வராஹி, சாமுண்டி ஆகிய ஏழு பேரும் ஒரே இடத்தில் ஒருசேர அமர்ந்து அருள் பாலிக்கும் காட்சி சிறப்புக்குரியது. 

இக்கோயில் மிகவும் சிதிலமடைந்து மேற்கூரை இன்றியும் பிரகாரம் இன்றியும் சிலைகளும் சேதமடைந்திருந்தன. இவ்வூர் மக்கள் கோயிலை புதிதாகக் கட்டி, சிலைகளை நேர் வரிசையில் கிழக்கு மேற்காக நிறுவி, வடக்கு திசை பார்ப்பதாக அஷ்டபந்தனம் செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடத்தி 
முடிக்கப்பட்டது. 

தற்போது இவ்வாலயத்திற்கு மகாமண்டபம் அமைக்கும் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலின் விசேஷம் என்னவெனில் தேவகி -வசுதேவருக்கு ஸ்ரீகிருஷ்ணருக்கு முன்பாகப் பிறந்த ஏழு சகோதரர்களை கம்சன் கொன்று விடுகிறான். அந்த ஏழு சகோதரர்களையும் ஸ்ரீகிருஷ்ணர் தன் தாயின் கோரிக்கையினை ஏற்று உயிர்ப்பிக்கிறார். உயிர்ப்பிக்கப்பெற்ற அந்த ஏழு சகோதரர்கள் கிரதிவந்தன், சுதேஷ்ணன், மித்திர சேனன், ருசு, சமந்தன், த்திராக்கன், சங்கருஷ்ணன் ஆகிய இந்த ஏழு பேரும் அண்ணன்மார் சிலைகள் என்ற வகையில் கோயிலின் முகப்பிற்கு வலது புறத்தில் கிழக்கு நோக்கி நிறுவப்பட்டுள்ளார்கள். இவர்கள் கோவாத்தம்மனின் காவலர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த சப்த மாதா ஆலயத் திருப்பணி செய்வதற்கு போதிய நிதி தேவைப்படுகிறது.

இத்திருப்பணியில் தங்களுடைய பங்களிப்பை செய்வதற்கும், பங்கு பெறவும் தொடர்பு கொள்ள: 9444047101.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com