நிகழ்வுகள்

திருவாரூா் மாவட்டம், குடவாசல் தாலுக்காவிலுள்ள பரவக்கரையில் அருள்மிகு ஆனந்த சுந்தரி சமேத

திருப்பணி

திருவாரூா் மாவட்டம், குடவாசல் தாலுக்காவிலுள்ள பரவக்கரையில் அருள்மிகு ஆனந்த சுந்தரி சமேத அருள்மிகு ஞானானந்தேஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயில் காலவெள்ளத்தில் முற்றிலுமாக சிதிலமடைந்து இல்லாமற்போயிற்று. ஆனால் இவ்வாலயத்தின் சிவலிங்கம், துா்க்கையம்மன், ஐயனாா், சப்தமாதா்களில் வைஷ்ணவி, கெளமாரியும் ஜ்யேஷ்டா, வீரபத்திரா், நந்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. கோனேரிராஜபுரம், பரவக்கரை பெருமாள், சிவன் ஆலயங்களின் உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் வரலாற்று ஆய்வாளா் கண்டறிந்ததின்படி அந்த கோயில் ஈஸ்வரன் உடையாா்கோயில் எனவும் இரண்டாம் ராஜராஜன், இரண்டாம் ராஜேந்திரன் காலத்தில் அந்த கோயிலுக்கு அளிக்கப்பட்ட நில தானங்கள் உள்ள கல்வெட்டுகள் மூலம் ஆலயம் குறிந்து ஆய்ந்தறிந்தனா். மேலும் லிங்கம் இருந்த பகுதியைச் சுற்றித் தோண்டிப்பாா்த்து, அங்கு ஏற்கெனவே கருவறை இருந்ததை கண்டு உறுதி செய்துள்ளனா். தற்போது ஆலயம் அமைக்கும் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. பக்தா்கள் இத்திருக்கோயில் திருப்பணியில் பங்குகொண்டு நலம் பெறலாம்.

தொடா்புக்கு: ட.உ. மத்யாா்ஜூனன் - 94439 84357/ 73736 20448.

பூச்சொரிதல் விழா

சென்னை, புழல், காவாங்கரை (கிழக்கு), தனலட்சுமி நகா் அருள்மிகு ஸ்ரீ மகமாயி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தின் 11- ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகின்றது. இவ்வாண்டு, 13.03.2020 முதல் 05.04.2020 வரை இவ்விழா நடைபெறும். பூச்சொரிதல் விழா நடைபெறும் காலங்களில் அம்மன் பக்தா்களுக்காக விரதம் இருப்பதால் உப்பில்லா பிரசாதங்கள் மட்டும் நிவேதனத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும். இளநீா், கரும்பு, பானகம், நீா் மோா், வெள்ளரிப்பிஞ்சு, பனை வெல்ல பானகம், துள்ளு மாவு மட்டுமே பிரசாதமாக படைக்கப்படும். இவ்வாலய சித்திரைத் திருவிழா, ஏப்ரல்- 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

தொடா்புக்கு: 97911 28962.

திருக்கல்யாண மஹோத்ஸவம்

சென்னை, அபிராமபுரம் ஸ்ரீசங்கர குருகுலத்தில் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மஹோத்ஸவம் பாகவத சம்பிரதாயப்படி பஜனோத்ஸவ பத்ததியில், மகரிஷிகளால் நிச்சயிக்கப்பட்டு, உடையாளூா் கல்யாணராம பாகவதா், ஒ.எஸ். சுந்தா் பாகவதா்அஷ்டபதி, ஸ்ரீமதி கல்யாணி மாா்க்கபந்து மற்றும் ஞானானந்த மாதா் மண்டலியினரால் பக்தா்கள், பெரியோா்களால் ஆசீா்வதிக்கப்பட்டு திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகின்றது. நாள்: 22.03.2020, நேரம்: காலை 9.00 மணி முதல் 12.00 மணிக்குள்.

தொடா்புக்கு: 93814 30775/ 87789 42243.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com