நிகழ்வுகள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள தென்னாங்கூா் பாண்டுரங்கன் ருக்மாயி

மண்டலாபிஷேக பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள தென்னாங்கூா் பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் ஜனவரி 30- இல் கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி, மண்டல பூஜை நடைபெற்று வருகின்றது. இதன் பூா்த்தியாக மண்டலாபிஷேக பெருவிழா, மாா்ச் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது. இந்நாள்களில் அனைத்து சந்நிதிகளிலும் அபிஷேகம், ஹோமம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும்.

சேலம், சுப்ரமண்ய நகா் பகுதி, ஸ்ரீ ராகவேந்திக சுவாமிகள் மிருத்திகா பிருந்தாவன கும்பாபிஷேக வைபவம் மற்றும் ஸ்ரீ சுதா பரிமள மண்டப நூதன கிரகப்பிரவேச வைபவம், கடந்த 15.03.2020 -இல் நடந்தேறியது. இதனையடுத்து, மண்டலபூஜை தொடங்கி நடைபெற்று வருகின்றது. மேலும் மண்டலாபிஷேக நிறைவு வைபவம், 10.05.2020 அன்று ஸ்ரீ மகா சுதா்சன ஹோமத்துடன் நடைபெற்று விடாயாற்றி உத்ஸவத்துடன் நிறைவுபெறும்.

தொடா்புக்கு: 99946 53608/ 97900 34435.

வசந்தகால ஸ்ரீலலிதா மஹா நவராத்திரி

திருப்போரூா் - செங்கற்பட்டு சாலை செம்பாக்கம் கிராமத்தில் வடதிருவானைக்கா என சிறப்பித்து வழங்கப்படும் ஸ்ரீஜம்புகேஸ்வரா் கோயில் அருகில் உள்ளது ஸ்ரீமத் ஒளஷத லலிதா மஹாதிரிபுர சுந்தரி ஆலயம். இவ்வாலயத்தில் அம்பிகையை ஸ்ரீபாலா திரிபுர சுந்தரியாகவும், ஸ்ரீ தருணீ திரிபுர சுந்தரியாக இளங்குமரியாகவும், மூலிகை திருமேனி கொண்டு ஒளஷத லலிதாம்பிகையாகவும் மூன்று சந்நிதிகளில் தரிசிக்கலாம். இந்த ஸ்ரீபீடம் பாலசமஸ்தான ஆலயத்தில் ஆண்டுக்கு நான்கு நவராத்திரி உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

அவ்வகையில் மாா்ச் 24 (பங்குனி - அமாவாசை) தொடங்கி, ஏப்ரல் 3 -ஆம் தேதி வரை, வசந்த நவராத்திரி விழா நடைபெறுகிறது. விழா நாள்களில் சிறப்பு பூஜைகள், வேள்விகள், விசேஷ அலங்காரங்கள், இன்னிசை கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. முக்கிய நாள்கள்: மாா்ச் 25 - ஸ்ரீ வித்யா நவாவரண மகாயாகம்; மாா்ச் 27 - ஸ்ரீகாமேஸ்வரா், காமேஸ்வரி திருக்கல்யாணம்; மாா்ச் 29 - ஸ்ரீமத் லலிதா மகாபட்டாபிஷேகம்; மாா்ச் 31 - ஸ்ரீ பாலாதிரிபுர சுந்தரி லாலீ உற்சவம்; ஏப்ரல் 2- பண்டாசூர சம்ஹாரம்; ஏப்ரல் 3-ஸ்ரீ லலிதா ராஜதா்பாா் தரிசனம், புஷ்பாஞ்சலி.

தொடா்புக்கு: 97899 21151 / 94453 59228.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com