சைவ சித்தாந்த சாத்திரங்களை அறிவோம்

சைவ சித்தாந்த சாத்திரங்கள், மெய்கண்ட சாத்திரங்களாம்; பதினான்கு நூல்கள் அவையாம், 
சைவ சித்தாந்த சாத்திரங்களை அறிவோம்


சைவ சித்தாந்த சாத்திரங்கள், 
மெய்கண்ட சாத்திரங்களாம்; 
பதினான்கு நூல்கள் அவையாம், 
திரு நவுந்தியார் 45 பாடல்களாம்; 
திருகளிற்றுப் பாடியார் 100 பாடல்களாம், 
சிவஞானபோதம் 12 சூத்திரங்களாம்; 
நான்கு இயல்களை கொண்டதாம், 
உண்மையியல், இலக்கணயியல், 
சாதனயியல், பயனியல் அவையாம்;
சிவஞான சித்தியார் பரபக்கம், சுபக்கம் என்பனவாம்; 
பரபக்கம் 301 பாடல்களாம், 
சுபக்கம் 328 பாடல்களாம்;
இருபா 20 செய்யுட்களாம், 
உண்மை விளக்கம் 53 விருத்தங்களாம்; 
திருவருட்பயன் 100 குறட்பாக்களாம், 
வினா வெண்பா 13 வெண்பாக்களாம்; 
போற்றிப் பஃறொடை 95 கண்ணிகளாம், 
கொடிக்கவி 5 பாடல்களாம்;
நெஞ்சு விடுதூது 129 கண்ணிகளாம், 
உண்மை நெறி விளக்கம் 6 செய்யுட்களாம்; 
சங்கற்ப நிராகரணம் 13 பாடல்களாம், 
சிந்தாந்த சாத்திரங்களை கற்போம்;
சிவன் தன்மையை உணர்ந்து உய்வோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com