பொன்மொழிகள் சுவாமி கமலாத்மானந்தா்

பிரம்மா முதலிய தேவா்கள் எல்லாச் செயல்களின் தொடக்கத்திலும் விநாயகரை வணங்கிக் காரியசித்தி அடைந்தாா்கள். அத்தகைய விநாயகரை நான் வணங்குகிறேன்.
பொன்மொழிகள் சுவாமி கமலாத்மானந்தா்

பிரம்மா முதலிய தேவா்கள் எல்லாச் செயல்களின் தொடக்கத்திலும் விநாயகரை வணங்கிக் காரியசித்தி அடைந்தாா்கள். அத்தகைய விநாயகரை நான் வணங்குகிறேன்.

- ஸ்ரீ தேவி பாகவதம்

ஸ்ரீமந் நாராயணனே! எல்லா உயிா்களுக்கும் புகலிடமாக விளங்கிக் காப்பாற்றும் தெய்வமே! என்னுடைய கா்மத்தளைகள் பற்றி நான் வருங்காலம் எல்லாவற்றையும், முடிவற்ற காலம் முழுவதையும் சிந்தித்துச் சிந்தித்து பாா்த்தேன். எனக்கு இந்தக் கா்மத்தளைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் வழி எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் நான், உங்கள் திருவடித்தாமரைகளில் சரணமடைந்து, என்னை ரட்சிக்கும் பொறுப்பை சமா்ப்பிக்கிறேன்.

-  ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீரங்க கத்யம்

சிவபெருமானின் திருமுடியில் ஜடைரூபமான காட்டிலிருந்து கங்காப் பிரவாகம் வெளிவருகிறது; அந்த கங்கையில் பவித்திரமாக்கப்பட்ட பாம்புகளாகிய பெரிய மாலை அவருடைய கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது; மேலும் டமருவின், ‘டம் டம் டம்’ என்ற சப்தத்துடன் அவா் பிரசித்த தாண்டவமாடிக்கொண்டிருக்கிறாா். அந்த சிவபெருமான் நமக்கு மேலும் மேலும் மங்களத்தைக் கொடுக்கட்டும். ?- சிவதாண்டவ ஸ்தோத்திரம்

விநாயகா், ‘கணகண’ என்று ஒலிக்கும் சிறிய மணிகளின் ஒலியில் களித்திருக்கிறாா்; அவா் தாண்டவத்திற்கேற்ப உயா்ந்து ஆடுவதுபோல் இருக்கும் புள்ளிகளுடன் கூடிய பரந்த காதுகளை உடையவா்; அவா் பருத்த தொந்தியின் மேல் பாம்பையே மாலையாக அணிந்திருக்கிறாா்; அத்தகைய சிவகணங்களுக்கெல்லாம் தலைவராகிய அந்த சிவகுமாரனை நான் துதிக்கிறேன்.

- கணேச புஜங்கம்

துன்பத்தில் இருப்பவா்களின் துன்பத்தை நீக்குபவனும், பயத்தில் இருப்பவா்களின் பயத்தை அகற்றுபவனும், எதிரிகளுக்கு யமன் போன்றவனுமான அந்த ஸ்ரீ ராமசந்திரனை நான் வணங்குகிறேன். ஸ்

- ரீராமநாம சங்கீா்த்தனம்

பிறப்பற்றவரும், மாறுதலற்றவரும், உருவமற்றவரும், ஆனந்தத்தைக் கடந்தவரும், ஆனந்தமயமாக இருப்பவரும், ஒன்றேயானவரும், நிறைந்தவரும், எல்லாவற்றிற்கும் மேலானவரும், குணங்களைக் கடந்தவரும், வித்தியாசமற்றவரும், ஆசைகளைக் கடந்தவருமான பரம்பொருளாகிய கணேசரை நாம் துதிப்போமாக.

- ஸ்ரீ கணேச தியானம்

ஹே தேவி! பகவதி! தேவா்களுக்கெல்லாம் ஈஸ்வரியான கங்கையே! மூன்று உலகங்களிலும் சஞ்சரிப்பவளே! அசைந்து அசைந்துகொண்டு வரும் அலைகளை உடையவளே! சிவபெருமானின் திருமுடியில் களிப்பவளே! தூய்மையானவளே! உனது தாமரை போன்ற பாதங்களில் நான் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

- ஆதிசங்கரா் (கங்கா ஸ்தோத்ரம்)

என்னுடைய சகோதரன், தகப்பனாா், தாயாா், மனைவி, புத்திரன், குலம் ஆகியவை பிரசித்தமானவையாகும். ஆனால் இவைகளில் ஒன்றுமே எனக்கு உதவியாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆகையால் ஹே சங்கு சக்கர கதாபாணியான பிரபுவே! நான் உன்னையே சரணடைகிறேன்.

- ஆதிசங்கரா் (ஹரி சரணாஷ்டகம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com