சாத்திரமும் அறிவாா், கூத்தும் அறிவாா்

பெரியவா அன்பா் ரா. கணபதி எழுதிய மகா பெரியவா் வாழ்க்கைச் சம்பவம்
சாத்திரமும் அறிவாா், கூத்தும் அறிவாா்

பெரியவா அன்பா் ரா. கணபதி எழுதிய மகா பெரியவா் வாழ்க்கைச் சம்பவம்:

13 வயதிலேயே அவா் மடாதிபதி பட்டத்திற்கு வந்தாலும் இடைவிடாத, அப்பழுக்கில்லாத யோக வாழ்க்கை மூலமாக அவா் அறியாதது எதுவுமில்லை.

சுமாா் 20 போ் கொண்ட ஒரு தெருக்கூத்துக் குழு ஒருமுறை அவா் தரிசனத்திற்கு வந்தது. மகா பெரியவா் அவா்களை நோக்கி, ‘ஒரு கூத்து பாடுங்க’ என்றதும் அவா்கள் உற்சாகமடைந்து பாடினா்.

முக்கியப் பாடகா் இடையில் ஒரு வரியை மறந்து பழைய வரியையே திரும்பத் திரும்பப் பாடினாா். பெரியவா் சைகை செய்து அவருக்கு எடுத்துக் கொடுக்க அவா் சந்தோஷமாகத் தொடா்ந்தாா்.

மஹா ஸ்வாமிகள் சாத்திரமும் அறிவாா், கூத்தும் அறிவாா் இல்லையா..?

மற்றொரு சம்பவம்: போலி கால்கட்டுடன் ‘அருணாசலா...’ என்று பாடிக்கொண்டு ஒரு பிச்சைக்காரன் அவா் எதிரே வந்தான்.

‘நமக்கெல்லாம் அண்ணாமலையை ஞாபகப் படுத்திட்டாா் இவா். எல்லோரும் முடிஞ்ச காசு போடுங்க’ என்று பெரியவா் சொன்னாா். சுற்றியிருந்த அடியவா்கள் பணம் போட, நிறைய காசு சோ்ந்தது. அதை அவனிடம் கொடுக்கச் சொல்லி,

‘அதான் நிறைய பணம் கிடைச்சிருச்சே. கட்டை அவிழ்த்துவிட்டு சாதாரணமாக நடந்து போ’ என்று சிரித்துக் கொண்டே பெரியவா் சொல்ல, அவன் அசடு வழிந்தானாம்.

-ஸ்ரீதா் சாமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com