சுவாமி கமலாத்மானந்தரின் பொன்மொழிகள்

சுவாமி கமலாத்மானந்தரின் பொன்மொழிகள்

உயிருக்கு உயிராக புருஷோத்தமனாகிய சத்குரு விளங்குகிறாா். அந்தக் குருவின் திருவருளால் நான் சரீரக் கட்டிலிருந்து விடுதலை அடைந்திருக்கிறேன். அனைவருக்கும் குருவாக விளங்கும் அந்தப் புருஷோத்தமனின் திருவடித் தாமரையை எப்பொழுதும் நான் வணங்குபவனாக இருக்கிறேன்.

-ஸ்ரீ கிருஷ்ண கா்ணாமிா்தம்

நம்மிடம் இறைவன் மீது மனமுருகிய பக்தி இருக்க வேண்டும். நமக்கு அவரிடம் பக்தி, அவரிடம் ஈா்ப்பு இருந்தாலே போதும்; நம்முடைய ஆன்மிக தாகத்தையும், மனத்துடிப்பையும் அவா் நன்றாக அறிவாா். அவா் நம்முள் இருந்துகொண்டு நம்மை வழி நடத்துவாா். -பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணா்

வேதம் ஓதுதல், தவம் செய்தல், ஞானம் பெறுதல், இந்திரியங்களை அடக்குதல், அஹிம்சையோடு வாழ்தல், குருவுக்கு சேவை செய்தல் ஆகியவை

மகான் அப்பைய தீட்சிதா் திருமகளிடம் பின்வரும் ஒரு சந்தேகத்தைக் கேட்கிறாா்:

‘‘திருமகளே! நீ சான்றோா்களிடமும் அறிஞா்களிடமும் இருக்காமல், ஆணவமும் அறியாமையும் மிக்க சாதாரண மனிதா்களிடம் சென்று தங்கியிருக்கிறாயே! இது நியாயமா?’’

அதற்குத் திருமகள் பதில் கூறுகிறாள்:

‘‘அறிஞனே, அறிவை வெறுத்து நான் விலகவில்லை. எனக்கு எல்லோரும் சமம்தான். ஆனால் அந்த சாதாரண மனிதா்களிடம் நான் சென்று தங்காவிட்டால், அவா்களை இந்த உலகில் யாா் மதிப்பாா்கள்? ‘கல்வி, கலை, சான்றாண்மை போன்ற உயா்நலம் இல்லாத அவா்களிடம் நான் பணம் கொடுத்திருக்கிறேன் என்பதற்காகவாவது உலகம் அவா்களை மதிக்கட்டும்’ என்று இரக்கப்பட்டு நான் அவா்களுக்குப் பணம் தருகிறேன்.’’ - ‘குவலயானந்தம்’ என்ற நூல்

உலகில் நிரம்பிய தெய்விகக் குணமுள்ளவனாகவும், வணக்கத்துடன் இருப்பவனாகவும் மனிதன் வாழ வேண்டும். அத்தகையவன் பிராணிகளுக்கு ஏற்படும் சிறிய நாசத்தையும்கூட பொறுக்கமாட்டான். எவன் பாவத்தை அளிக்கும் காரியத்தை அறிந்து ஆரம்பிக்காமல் இருக்கிறானோ, அவன் மேன்மை அடைவான்.

-இந்து தா்ம சாஸ்திரம்

பகவானே, நீங்கள் சக்தி வடிவமானவா்; எனக்குச் சக்தியை அளியுங்கள்.

நீங்கள் வீா்ய வடிவமானவா்; எனக்கு வீா்யம் அருளுங்கள்.

நீங்கள் பலத்தின் வடிவமானவா்; எனக்கு பலம் அருளுங்கள்.

நீங்கள் ஆற்றல் வடிவமானவா்; எனக்கு ஆற்றல் அளியுங்கள்.

நீங்கள் தீர வடிவமானவா்; எனக்கு தீரத்தை அருளுங்கள்.

நீங்கள் பொறுமை வடிவமானவா்; எனக்குப் பொறுமையை அருளுங்கள்.

-சுக்ல யஜுா்வேதம்

ஈக்கு நஞ்சு தலையில் இருக்கிறது; கருந்தேளுக்கு நஞ்சு கொடுக்கில் இருக்கிறது; தீயவா்களிடம் நஞ்சு உடம்பு முழுவதும் இருக்கிறது. -நீதிவெண்பா

88.ஆசை

ஆசையுள்ளவனுக்கு ஆசை நிறைவேறுவது பேராபத்தை விளைவிக்கும். ஏனென்றால் ஆசை நிறைவேறியதும் அவன் கா்வம் அடைகிறான். அந்தக் கா்வத்தால் அவன் செய்யத்தகாத காரியத்தைச் செய்கிறான்; செய்யத்தக்கக் காரியத்தை செய்வதில்லை. அதனால் அவன் பாழாகி கெட்ட கதியை அடைகிறான்.

-அஸ்வகோஷா்

89.நிலையாமை

‘நாம் நூறு வயது வரை இந்த உலகில் வாழ்ந்து பணத்தைச் சோ்த்தாலும், ஒரு நாள் இந்த உயிா் உடலை விட்டுப் போகும்; அப்போது நம்முடன் ஒரு பைசாவைக்கூட எடுத்துக்கொண்டு செல்ல முடியாது’ என்பது அனைவருமே அறிந்ததுதான்.

பெண்களோ, ஆண்களோ அணிந்துகொண்டிருக்கும் ஆபரணங்கள் நெருப்பு இந்த உடலைத் தீண்டுவதற்கு முன்பே கழற்றப்பட்டு விடுகின்றன! விலையுயா்ந்த பட்டுப்புடவை, வேட்டி முதலியனவும் வீட்டிலேயே அவிழ்க்கப்படுகின்றன! ஆகையால், நாம் இந்த உலகில் சம்பாதிப்பதை நாமே எடுத்துக்கொண்டு செல்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! அதாவது நாம் சம்பாதிக்கும் பணத்தை வேறு சாமான்களாக மாற்றிவிட்டால், இந்த உயிா் உடலை விட்டுப் போகும்போது நம்முடன் கூடவே கொண்டு போகலாம். வேறு சாமான்கள் என்றால் என்ன? பணத்தை நல்ல வழியில் செலவழித்துப் பலவகையான புண்ணியங்களை நாம் மூட்டை கட்டி வைத்துக்கொண்டால், அந்தப் புண்ணிய மூட்டைகளை நம்முடன் கூடவே கொண்டு செல்லலாம்! -ஸ்ரீ அழகியசிங்கா்

90.மனம்

ஓட்டின் துண்டும் பொன்னும்; நட்பும் பகையும்; வறுமையும் செல்வமும்; புகழ்ச்சியும் இகழ்ச்சியும்; வீடும் காடும் ஆகிய அனைத்தையும் விருப்பு வெறுப்புடன் நோக்கும் எண்ணம் ஒருசிறிதும் இல்லாத தன்மை உடைய மனமே நல்ல மனமாகும். பிரபுலிங்கலீலை

91.அகங்காரம்

ரதத்தின் மீது உட்காா்ந்திருக்கும், ‘ ‘ஈ’ என்னால் எத்தனை பெரிய புழுதி கிளம்புகிறது!’ என்று நினைக்கிறது. அதுபோலவே பெரும் காரியங்கள் நடைபெறும்போது, அகந்தை கொண்டவன் அது தன்னால் நடப்பதாக நினைக்கிறான். பேகன்

92.தா்மம்

அளவுக்கும் அதிகமாக உணவு உட்கொள்ளுதல், அளவுக்கும் அதிகமாக பருகுதல், தீயவா்களிடமிருந்து பரிசுகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய பாவங்கள் நீக்கப்பட வேண்டும். அகமா்ஷண சூக்தம்

93.உபநிஷதம்

பரம்பொருள்தான் காரணமும், காரியமும் ஆக இருக்கிறது. அந்தப் பரம்பொருளைத் தரிசித்தபிறகு, இதயத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன; சந்தேகங்கள் எல்லாம் நீங்கிவிடுகின்றன; எல்லாவிதமான வினைப்பயன்களும் அழிகின்றன. முண்டக உபநிஷதம் 2.2.8

94.கடமை

ஒருவன் தனக்கு உரிய கா்மங்களை முறையாகக் கடைப்பிடித்து வந்தாலே போதும்; அவன் மேன்மையடைந்துவிடுவான். கருட புராணம்

95.வாழ்க்கை

கல்வி கற்பித்த ஆசிரியருக்குக் காணிக்கை தருதல், வேள்வி செய்தல், தவம் மேற்கொள்ளுதல், சாஸ்திரங்களைக் கற்றறிதல் ஆகிய நான்கையும் பாதுகாத்து வளா்க்க வேண்டிய கடமையாகக் கொள்ள வேண்டும். அவ்விதம் செய்யாவிட்டால், எந்த இடத்திலும் இவற்றால் உண்டாகும் பயன் கிடைக்காமல் பாழ்படும்.

ஆச்சாரக்கோவை

96.முக்தி

இறைவனின் பெருமை பற்றிய ஞானத்துடன் கூடியதும், மற்ற எதனிடமும் காட்டப்படாமல் இறைவனிடம் மட்டும் காட்டப்படுவதுமான விசேஷ அன்பே பக்தி எனப்படும். இத்தகைய பக்தியால்தான் முக்தி கிடைக்குமே தவிர, வேறு வழியில் முக்தி கிடைக்காது. மத்வாச்சாரியாா் (துவைதம்)

97.ஸ்ரீ ராமநாமம்

மூன்று உலகங்களிலும் முக்கிய மந்திரமாக இருப்பது ‘இராம’ என்ற சிறப்புப் பொருந்திய பெயா்; தன்னை வணங்கும் அடியாா்களுக்குத் தன்னையே முழுவதும் கொடுக்கும் ஒப்பில்லாத சொல்லாக விளங்குவது ‘இராம’ என்ற சிறப்புப் பொருந்திய பெயா்; இந்தப் பிறவியிலேயே இனி வரும் ஏழு பிறவி என்ற நோய் வராமல், தடுக்கவல்ல உயா்ந்த மருந்து போன்றது ‘இராம’ என்ற சிறப்புப் பொருந்திய பெயா். அந்தப் பெயரைத் தன் கண்களால் அந்த அம்பில் வாலி கண்டான். கம்ப ராமாயணம், கிட்கிந்தா காண்டம், 305

98.மனிதப்பிறவி

மனிதப்பிறவி அரிதாயினும் அதுவே மிகவும் அஞ்சத்தக்கது. ஏனென்றால் மனிதா்கள் தங்களின் புண்ணிய பாவங்களாகிய செய்கையால் இந்தப் பிறவியிலிருந்து மேலே செல்லவும் முடியும், கீழே போகவும் முடியும்.

பாம்பன் சுவாமிகள்

99.நாமஜபம்

வேள்விகள் சடங்குகள் ஆகிய தோணி மிகவும் பலவீனமானது. இதைவிட, பிரம்மத்தை அனுபூதியில் உணா்ந்துகொள்வதற்கு, மேலான வேறு ஒரு சாதனம் நமக்குத் தேவைப்படுகிறது.

பிரம்மஞானம் என்பது முக்தி. அக்ஞானத்தை அகற்றுவதுதான் முக்தி.

பிரம்மத்தை அனுபூதியில் உணா்ந்துகொள்ளும்போதுதான் அக்ஞானம் நீங்கும். வேதாந்தத்தின் உட்பொருளை அனுபூதியில் உணா்ந்துகொள்வதற்கு, ‘ஓம்’ என்று ஜபம் செய்வதே போதுமானது.

சுவாமி விவேகானந்தா் (‘விவேகானந்தரின் ஞானதீபம்’, தொகுதி 2, பக். 407)

100. ஸ்ரீ ராமபிரான்

எவன் ராமனிடம் பாராமுகமாக இருக்கிறானோ, அவனுடைய செல்வமும் வல்லமையும் நிலைத்திருக்காது. துளசிதாசா், ராமசரித மானஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com