சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் தேவன்!

எகிப்து தேசத்தில் அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேலரை தேவன், மோசேயின் மூலமாக மீட்டு, அங்கிருந்து வெளியே கொண்டு வந்தார்.
சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் தேவன்!

எகிப்து தேசத்தில் அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேலரை தேவன், மோசேயின் மூலமாக மீட்டு, அங்கிருந்து வெளியே கொண்டு வந்தார்.
பின்னர், அவர்களுக்கு மிகவும் செழிப்பான தேசமாகிய "கானான் தேசத்தைத் தருவேன்' என தேவன் வாக்கு கொடுத்திருந்தார். 
அதன்படி, அந்த ஜனங்கள் கால்நடையாக கானான் தேசத்தை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் கானான் தேசத்துக்கு அருகில் வந்தபோது, "அந்த தேசம் எப்படிப்பட்டது? அங்குள்ள மக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்?' என்று தெரிந்துகொள்வதற்காக யோசுவா, காலேப் உள்பட பன்னிரண்டு பேரை மோசே அனுப்பினார்.
அங்கு சென்ற பன்னிரண்டு பேரும் அந்த தேசத்தை நாற்பது நாள்கள் சுற்றிப் பார்த்து, அங்குள்ள மக்கள் குறித்தும், அங்குள்ள வளங்கள் குறித்தும் தெரிந்துகொண்டனர். வரும்பொழுது, அங்கு விளைந்த மாதுளம் பழங்கள், திராட்சைகள் ஆகியவற்றையும் எடுத்து வந்தனர்.
பன்னிரண்டு பேரில் காலேப், யோசுவா தவிர மற்ற பத்து பேரும், இஸ்ரவேல் ஜனங்களிடம் வந்து, கானான் தேசத்தைக் குறித்து தவறாகக் கருத்து தெரிவித்தனர். 
அதாவது, "அந்த தேசத்தில் உள்ள மக்கள் நம்மிலும் பலவான்கள். நாம் அங்கு சென்றால் நம்மை அவர்கள் கொன்றுவிடுவார்கள்' எனக் கூறினர். இதனால், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் கானான் தேசத்துக்குள் பிரவேசிப்பது சாத்தியமற்றது என்றெண்ணி மிகவும் 
பயந்தார்கள்.
ஆனால், யோசுவாவும், காலேபும் அவ்வாறு கூறவில்லை. "அந்த தேசம் மிகவும் நல்ல தேசம்; அது மிகவும் செழிப்பானது; தேவன் நம்மைப் பாதுகாப்பார்' என்று விசுவாசத்துடன் சாத்தியமற்றதையும் தேவன் சாத்தியமாக்குவார் என மக்களிடம் கூறினர் (எண்ணாகமம் 13:30). 
இதைப் பார்த்த தேவன் "யோசுவா, காலேப் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மட்டும் கானான் தேசத்துக்குள் பிரவேசிப்பார்கள்; துர்செய்தி பரப்பிய பத்து பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் யாரும் கானானுக்குள் பிரவேசிப்பதில்லை' என்று கூறினார்.
அதேபோல், யோசுவா மற்றும் காலேப் குடும்பத்தினர் மட்டும் செழிப்பான கானான் தேசத்துக்குள் பிரவேசித்தனர்.
ஆகவே, நம்முடைய வாழ்க்கையிலும் மலை போன்ற பிரச்னைகள் வரலாம். "உன்னால் இது முடியாது' என மற்றவர்கள் கூறலாம். ஆனால், தேவனால் கூடாத காரியம் ஒன்றுமே இல்லை (மத்தேயு 19:24). எனவே, எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், தேவன் அதைத் தீர்க்க வல்லவராய் இருக்கிறார் என விசுவாசிக்க வேண்டும். அவ்வாறு நாம் தேவனை விசுவாசிக்கும்போது, அவர் அதனை எளிதாக்கி வெற்றி சிறக்கப் பண்ணுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com