பொன்மொழிகள்

 தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
பொன்மொழிகள்



அழகு, பண்பு, தயை ஆகியவற்றின் தனித்தனி உருவகமாகவே இறைவனைப் பார்த்து இன்பம் அடைய வேண்டும்.    
-விசிஷ்டாத்வைதம்

உழவன் ஏரைப் பூட்டி நிலத்தை ஆழமாக உழுகிறான். எருதுகளுக்குத் தீனியிட்டு வளர்த்து வேளாண்மை செய்பவனே உலகுக்கு உணவளிப்பவன். மேகம் தானாக மழையைப் பொழிந்தாலும், பயிர்த்தொழில் செழிக்காவிட்டால் உணவு ஏது? இன்பம் ஏது?        
-ரிக் வேதம் 4.7 

அழிவற்றதாகிய இறைவன் எந்த அறிவால் அடையப்படுகிறதோ, அதுவே உயர்ந்த ஞானமாகும்.
-முண்டக உபநிஷதம் 1.1.8

பிறந்த பச்சை குழந்தை தூய்மையானது, அறிவு தூய்மையானது, அது  போற்றுவதற்கு உரியது.
இறைவன் தொடர்புடைய கவிதை தூய்மை நிறைந்தது. பசு  பவித்திரமானது.
தூய்மையானவர்கள் சமூகத்தில் நல்ல நடத்தையுடன் வாழ்கிறார்கள். 

நாட்டுக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் வீரன் தூயவன். பலருக்கு நலம் விளைவிக்கும் செல்வம் தூய்மையானது.
செயல்திறமை தூயது, புஷ்டியளிக்கும் உணவு தூயது. ஆனந்தம் தூயது. குடும்பத்தைக் காக்கும் தலைவன் தூயவன். நல்வாக்கு எப்போதும் பவித்திரமானது. துயரத்தை நீக்கும் நண்பன் தூயவன்.
-ஸôம வேதம் 9.1 

அசுரர்களின் உலகங்கள் காரிருளினால் மூடப்பட்டிருக்கின்றன. ஆத்மாவை அழிப்பவர்கள் மரணத்திற்குப் பிறகு அந்த இருள் உலகங்களைஅடைகிறார்கள்.
-ஈசாவாஸ்ய உபநிஷதம், 3 

நீங்கள் சந்தர்ப்பம் வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கு அடிப்படையாகும்.
-நீதி சாஸ்திரம்

காலினால் காலைத் தேய்த்துக் கழுவக் கூடாது. உட்காரும் ஆசனத்தைக் காலால் இழுத்து உட்காரக் கூடாது.
-ஸ்வதர்மம்

 தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com