விசுவாசம் குணமாக்கிற்று

கப்பர்நாகுமில் இருந்த நூற்றுவர் தலைவர் ஒருவர் இயேசுவிடம் யூதரின மூப்பர்களை அனுப்பி மரணப்படுக்கையில் இருக்கிற தன் ஊழியனைக் காப்பற்ற வருமாறு வேண்டியதால் இயேசு அவன் இல்லம் நோக்கி புறப்பட்டுப் போனார்.
விசுவாசம் குணமாக்கிற்று

கப்பர்நாகுமில் இருந்த நூற்றுவர் தலைவர் ஒருவர் இயேசுவிடம் யூதரின மூப்பர்களை அனுப்பி மரணப்படுக்கையில் இருக்கிற தன் ஊழியனைக் காப்பற்ற வருமாறு வேண்டியதால் இயேசு அவன் இல்லம் நோக்கி புறப்பட்டுப் போனார்.
அவன் இல்லம் நெருங்குகையில் அப்படைத்தலைவன் தன் நண்பர்கள் சிலரை இயேசுவிடம் அனுப்பி ""அய்யா! நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் எனக்கு அருகதை இருப்பதாய் நான் கருதவில்லை. அதனால் இங்கிருந்தே ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியன் குணமாவான்!'' என்று மயங்காது தன் மன்றாட்டை அவர் முன் வைத்தான். இயேசு பெருமான் தம்மைத் தொடர்ந்து வந்த கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து ""இஸ்ரவேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை!'' என வியந்து பேசி நூற்றுவர் தலைவரது பணியாளனின் பிணியை நீக்கினார்.
ஆம்! நோயுற்றோர் எவராயினும் அவரிடம் வந்தபோதெல்லாம் அவர்களை நலமாக்கி விடை கொடுத்தபோது "உன் 
நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று' என்றார். 
 யாயீர் என்ற ஜெபக்கூடத் தலைவன் இயேசுவிடம் வந்து, தன் மகள் சாகும் தருவாயில் இருப்பதாகவும் வந்து அவளைக் காப்பாற்றக் கேட்டான். அவரும் புறப்பட்டுப் போனார். பெருங்கூட்டம் அவரை நெருக்கிக்கொண்டு அவரோடு சென்றது. 
அப்போது பன்னிரண்டு ஆண்டுகளாக பெரும்பாடு என்னும் ரத்தப்போக்கு நோயினால் அவதியுற்ற பெண்ணொருத்தி, "நான் அவருடைய மேலாடையின் விளிம்பினைத் தொட்டாலே நலமடைவேன்' என்ற நம்பிக்கையோடு அவரது ஆடையின் 
நுனியினைத் தொட்டாள். அக்கணமே நலமடைந்தாள்.
இயேசு தம்மை நெருக்கிய கூட்டத்தைப் பார்த்து ""என்னைத் தொட்டது யார்?'' எனக் கேட்டார். அருகிலிருந்த பேதுரு ""மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறதே..!'' என, அவரும் ""யாரோ ஒருவர் எனைத் தொட்டார். அப்பொழுது என்னிலிருந்து வல்லமை வெளிப்பட்டது!'' என்றார் இயேசு. 
அப்பெண் அஞ்சிய வண்ணம் அவர் முன் வந்து விழுந்து தனக்கு நேர்ந்ததைத் தயக்கமின்றி அறிவித்தாள். ""மகளே உன் விசுவாசம் உன்னை குணமாக்கிற்று. அமைதியுடன் போ!'' என்றார் இயேசு.
அங்கிருந்து யாயீர் இல்லம் நோக்கி போகும் வழியிலேயே அவன் மகள் மரித்துவிட்டாள் என்னும் சேதி வந்தபோது யாயீரைப் நோக்கி ""அஞ்சாதீர், நம்பிக்கையோடு மட்டும் இரும். உம் மகள் பிழைப்பாள்!'' என்று தீர்க்கமாய் சொன்னார் இயேசு. 
அவனும் நம்பினான். இறந்த சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார் இயேசு. சிலர் ஏளனமாய் சிரித்தார்கள். ஆனால் அவர் அழுவோரை அமைதிப்படுத்தினார். மரித்துக் கிடந்த அந்த மகளின் கையைப் பிடித்து ""சிறுமியே! எழுந்திடு..!'' என்றார். அவளும் உயிர் பெற்றாள்.
""கடுகளவு நம்பிக்கையிருந்தால் இந்தக் காட்டு அத்தி மரத்திற்கு கட்டளையிட்டு கடலில் வேரூன்றச் சொன்னால், அது உங்களுக்கு கீழ்ப்படியும்!'' என்று இயேசு சொன்னது தன்னம்பிக்கையின் விதை. 
""இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்றுக் கொண்டோம் என்று நம்புங்கள். அது கிடைக்கும்!'' என இயேசு கூறியது இறை நம்பிக்கை..!      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com